நடிப்பு அசுரன் என கொண்டாடப்படும் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அவரது 43 வது படம் மாறன். இந்த படத்தை துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது .படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. அஜித்தின் ஹைப் திரைப்படமான வலிமையும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மாறன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என சில தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன. ஆனால் படக்குழு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மாறன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘மாளவிகா மோகன்’ நடித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களை சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷ் மாளவிகாவுடன் சேர்த்து ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.