Varanasi Lok Sabha Results 2024: வாரணாசியில் வரலாறு படைப்பாரா பிரதமர் மோடி? எதிர்பார்ப்பில் பாஜகவினர்!

Varanasi Election Result: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 

Continues below advertisement

Varanasi Lok Sabha Elections 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நிறைவடைந்தது. ஏழு கட்ட வாக்குப்பதிவை தொடர்ந்து இன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

Continues below advertisement

தேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் தொகுதி: வாரணாசி தொகுதியில் கடந்த ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதி என்பதால் ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் இந்த தொகுதியின் மீது இருக்கிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு, வதோதரா, வாரணாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட மோடி, இரண்டையும் கைப்பற்றினார். பின்னர், வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதை தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு, வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார்.

இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி பிரதமர் மோடி முன்னிலை வகித்து வருகிறார். 

வாரணாசி தொகுதி முடிவுகள்: இங்கு இந்தியா கூட்டணி சார்பில் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக அதர் ஜமால் லாரி என்பவரும் போட்டியிடுகிறார். வாரணாசி மக்களவை தொகுதிக்கு இதுவரை 18 முறை தேர்தல் நடந்துள்ளது. அதில், 8 முறை காங்கிரஸ் கட்சியும் 7 முறை பாஜகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா கட்சி, ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

வாரணாசி மக்களவை தொகுதியின் கீழ் வடக்கு வாரணாசி, தெற்கு வாரணாசி, மத்திய வாரணாசி, ரோஹனியா, சேவாபூரி என ஐந்து சட்டப்பேரவை தொகுதிகள் வருகின்றன. இவை, அனைத்தும் தற்போது பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சி வசமே உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்கியவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். அந்த தேர்தலில், 581,022 வாக்குகள் பெற்று மோடி வெற்றி பெற்றிருந்தாலும், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

இதையும் படிக்க: Lok Sabha Election Results 2024 LIVE Updates | மக்களவைத் தேர்தல் முடிவுகள் LIVE

Continues below advertisement
Sponsored Links by Taboola