Election Results 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 543 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், நாளை எண்னப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை நேர்மறையாக நடத்தி தேர்தல் ஜனநாயகத்தை காத்திட கோரி மக்கள் இயக்கங்கள் சார்பில், மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
மதுரையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
மதுரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர், மதுரை மத்திய தொகுதி, தெற்கு, வடக்கு கிழக்கு மேற்கு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உட்பட்ட மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 542 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 1573 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான 9லட்சத்தி 80ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை முழுவதிலும் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தூரங்களுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வருவதற்கான கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை நேர்மறையாக நடத்தி தேர்தல் ஜனநாயகத்தை காத்திட கோரி, மக்கள் இயக்கங்கள் சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். ”நாடாளுமன்ற தேர்தலில் நேர்மையான வாக்கு எண்ணிக்கையை வலியுறுத்தியும், தேர்தல் ஜனநாயகத்தை காத்திட வலியுறுத்தியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தகுதி நீக்கம் செய்ய கோரியும், அரசியல் சட்டத்தைக் காக்க வேண்டும்”. உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தினர். அப்போது தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும், மத்திய பா.ஜ.க., அரசு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் மக்கள் கண்காணிப்பாக இயக்குநர் ஹென்றி திபேன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Lok Sabha Election Results 2024: மக்களவை தேர்தல் - 64.2 கோடி பேர் வாக்களிப்பு, இதுவரை இல்லாத புதிய உச்சம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Vadakkan Movie: டைட்டிலுக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு.. வடக்கன் படத்தின் பெயரை மாற்றிய படக்குழு!