தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுவிப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காலை 9 மணி வரையிலான நிலவரங்களை தமிழ்நாடு தேர்தல் ஆணைய இணையதளம் வெளியிட்டுள்ளது.


இவற்றில் வாக்குப்பதிவு நடைபெற்ற 489 பேரூராட்சிகளில் 168 பேரூராட்சிகளுக்கான வெற்றி விவரம் வெளியாகியுள்ளது.  தி.மு.க. 116 இடங்களிலும், அ.தி.மு.க. 15 இடங்களிலும், பா.ஜ.க. 4 இடங்களிலும், அ.ம.மு.க 2 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி 1 இடத்திலும், தே.மு.தி.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.




மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 21 மாநகராட்சியில் 7 மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மற்ற இடங்களின் நிலவரம் இதுவரை வெளியாகவில்லை. மாநிலம் முழுவதும் மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் காலை 9 மணி வரை 28 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 1 இடத்திலும், பா.ம.க. 1 இடத்திலும், தே.மு.தி.க. 1 இடத்திலும், பிற கட்சிகள் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள வ.புதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி காணாமல் போனதால், பூட்டை உடைத்து அறை திறக்கப்பட்டது. மேலும், கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட புனித வளானர் வாக்குப் பெட்டிகள் சாவி காணாமல் போனதாலும் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் படிக்க : TN Urban Election Results 2022 LIVE: ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ!