திருவண்ணாமலை தொகுதியில் ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்து வருவந்தார். இவர் 5,31,239 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையானது இன்று நடைபெற்று வரும் நிலையில் திருவண்ணாமலை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை காணலாம்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஜனநாயக கடமையாற்றினர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்
திருவண்ணாமலை தொகுதியில் ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்து வருவதால் தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் திருவண்ணாமலை தொகுதியில் 2 மணி நிலவரப்படி சி.என்.அண்ணாதுரை (திமுக) 1,97,711 வாக்குகளும், கலிய பெருமாள் (அதிமுக) 1,09,663 வாக்குகளும், டாக்டர் ரமேஷ் பாபு (நாம் தமிழர் கட்சி) 30,018 வாக்குகளும், அஸ்வதம்மன் (பாஜக்) 58,084 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை மக்களவை தொகுதி
தொகுதி மறுசீரமைப்பின்போது திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி (Tiruvannamalai Lok Sabha constituency) உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி பெருமளவு கிராமங்களை உள்ளடக்கியது. திருவண்ணாமலை தொகுதி திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம், கீழ் பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் செங்கம் தொகுதி தனித் தொகுதியாகும்.
1962 முதல் 2004 ஆம் ஆண்டு வரை திருப்பத்தூர் தொகுதியாக இருந்த போது இங்கு திமுக 8 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 1 முறையும் வெற்றி பெற்றது. அதேசமயம் திருவண்ணாமலையாக மாற்றப்பட்ட பிறகு நடந்த 3 தேர்தலில் 2ல் திமுகவும், ஒன்றில் அதிமுகவும் வெற்றி பெற்றது.
வாக்களித்தவர்கள் நிலவரம்
திருவண்ணாமலை தொகுதியில் 7,54,533 ஆண் வாக்காளர்களும், 7,78,445 பெண் வாக்காளர்களும், 121 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். இவர்களில் 5,58,720 ஆண் வாக்காளர்களும், 5,73,343 பெண் வாக்களர்களும், 39 மூன்றாம் பாலினத்தவர்களும் தங்கள் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினர். மொத்த வாக்கு எண்ணிக்கை சதவிகிதம் 74.24 என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள்
2019 மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சி.என்.அண்ணாதுரை அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தோற்கடித்தார். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் அண்ணாதுரை, அதிமுக சார்பில் கலியபெருமாள், பாஜக சார்பில் அஸ்வத்தாமன், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் ரமேஷ் பாபு களமிறங்கியுள்ளனர்.