திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 4,99,493 வெற்றி பெற்றுள்ளார். 


இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த வாக்குப்பதிவானது இன்று ஒரே கட்டமாக எண்ணப்பட்டது (ஜூன் 4) எண்ணப்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டியானது நிலவிய நிலையில் எந்த தொகுதியில் யார் ஜெயிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி தொகுதி பற்றி காணலாம். 


வாக்கு எண்ணிக்கை நிலவரம் 


நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பை சட்டமன்ற தொகுதி வாக்குப்பெட்டிகள் உள்ள அறையின் சாவி தொலைந்ததால் பூட்டு உடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ம்து அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.


மேலும் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்ட நிலையில் இதில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். இதனைத் தொடர்ந்து மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 499493 ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றார். திருநெல்வேலி தொகுதியில் 2 மணி நிலவரப்படி ராபர்ட் புரூஸ் (காங்கிரஸ்) 2,14,610 வாக்குகளும், நயினார் நாகேந்திரன் (பாஜக) 1,48,129 வாக்குகளும், சத்யா (நாம் தமிழர் கட்சி) 42,571 வாக்குகளும், ஜான்சி ராணி (அதிமுக) 39,073 வாக்குகளும் பெற்றுள்ளனர்.   


திருநெல்வேலி மக்களவை தொகுதி 


வற்றாத ஜீவநதியான தாமிரபரணியும், ஐந்திணைகளையும் கொண்ட தமிழ்நாட்டின் ஒரே மாவட்டமான திருநெல்வேலி எப்போதும் தேர்தல் முடிவுகளில் மிக முக்கிய பங்கு வகிப்பது வழக்கம். தமிழ்நாட்டின் 38வது தொகுதியான திருநெல்வேலி மக்களவை தொகுதி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். 


வாக்களித்தவர்கள் விவரம் 


இந்த தொகுதியில் 8,08,127 ஆண் வாக்காளர்களும், 8,46,225 பெண் வாக்காளர்களும், 151 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். இவர்களில் 5,13,441 ஆண் வாக்காளர்களும், 5,46,963 பெண் வாக்களர்களும், 57 மூன்றாம் பாலினத்தவர்களும் தங்கள் வாக்கினை செலுத்தினர். மொத்த வாக்கு எண்ணிக்கை சதவிகிதம் 64.10 என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.  


தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள் 


2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதியது. இதில் திமுக வெற்றி பெற்ற நிலையில், 2024 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராபர்ஸ் ஃபுரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா ஆகியோர் முக்கிய வேட்பாளராக களம் கண்டனர். 


Also Read: Tamil Nadu Lok Sabha Election Results 2024 LIVE Updates | தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 LIVE