தமிழ்நாட்டில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. அதனை அடுத்து, பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெற்ற வேட்புமனு தாக்கலில், மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் பதவிமிடங்களுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான 04.02.2022 வரை மொத்தம் 74416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையினை 26.01.2022 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் 28.01.2022 முதல் இறுதி நாளான 04.02.2022 வரை பெறப்பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: TN Urban Local Body Election News LIVE: தமிழ்நாடு முழுவதும் இன்று வேட்புமனு மீது பரிசீலனை..!

பெறப்பட்ட வேட்பு மனுக்களின் மொத்த விபரம்

மாநகராட்சி வார்டு உறுப்பினர் நகராட்சி வார்டு உறுப்பினர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் மொத்தம்
14,701 25,354 36,361 74,416

மேலும், தேர்தல் நடக்க இருப்பதையொட்டி அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் முக்கிய பணிகளில் ஈடுபட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று வேட்புமனு மீது பரிசீலனை செய்யப்பட இருக்கிறது.

மேலும் படிக்க: Urban Local Body Election: அடையாள அட்டை அவசியம் - முகவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண