TN Urban Local Body Election News LIVE: 30,735 வாக்குச்சாவடிகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன - மாநில தேர்தல் ஆணையம்..

TN Urban Local Body Election 2022 News LIVE Updates: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : இன்றுடன் ஓய்கிறது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம்

ABP NADU Last Updated: 18 Feb 2022 07:08 PM
மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப்பிரிவு அறிக்கை..

”நாளை (19.2.2022) நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவில், நமது மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் அவர்கள் 
வார்டு எண்.123, சென்னை ஹைஸ்கூல்,  திருவள்ளுவர் தெரு, தேனாம்பேட்டையில் தனது வாக்கினை பதிவு செய்வார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்
நன்றி”. 


ஊடகப்பிரிவு, 
மக்கள் நீதி மய்யம்.

கோவையில் உள்ள குண்டர்கள், ரவுடிகளை வெளியேற்றுக: ஈபிஎஸ் ஆவேச பேச்சு..

கோவையில் உள்ள குண்டர்கள், ரவுடிகளை வெளியேற்றுக: ஈபிஎஸ் ஆவேச பேச்சு..

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக பாதுகாப்பு பணிகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன - மாநில தேர்தல் ஆணையர்

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக பாதுகாப்பு பணிகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன - மாநில தேர்தல் ஆணையர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகளைக் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தற்போது விளக்கமளித்து வருகிறார்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகளைக் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தற்போது விளக்கமளித்து வருகிறார்

கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - மாநில தேர்தல் ஆணையம்

கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - மாநில தேர்தல் ஆணையம்

சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - மாநில தேர்தல் ஆணையம்

சென்னையில்  மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - மாநில தேர்தல் ஆணையம்

தமிழகம் முழுவதும், 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன - மாநில தேர்தல் ஆணையம்..

தமிழகம் முழுவதும், 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன - மாநில தேர்தல் ஆணையம்..

சட்ட ஒழுங்கைப் பேணிக்காக்க சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர் - மாநில தேர்தல் ஆணையம்

சட்ட ஒழுங்கைப் பேணிக்காக்க சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர் - மாநில தேர்தல் ஆணையம்

30,735 வாக்குச்சாவடிகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன - மாநில தேர்தல் ஆணையம்..

30,735 வாக்குச்சாவடிகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன - மாநில தேர்தல் ஆணையம்..

கோவை சிறப்புத் தேர்தல் பார்வையாளர் நியமனம்

உள்ளாட்சித் தேர்தல் : நில நிர்வாக ஆணையராக இருந்த நாகராஜன், கோவை சிறப்புத் தேர்தல் பார்வையாளர் நியமனம்

மதுரை மாநகராட்சி திமுக வேட்பாளர் வேட்புமனுவை ரத்து செய்யக்கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

மதுரை மாநகராட்சி திமுக வேட்பாளர் வேட்புமனுவை ரத்து செய்யக்கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்





நெல்லை : மாநகர பகுதிகளில் 60 பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 36 மொபைல் டீம் அனுப்பி வைப்பு..

 நெல்லை : மாநகர பகுதிகளில் 60 பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 36 மொபைல் டீம் அனுப்பி வைப்பு..

TN Urban Local Body Election : அதிமுகவில் விலகி திமுகவில் இணைந்தார் வேட்பாளர் கீதா சுப்பிரமணியன் ..

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் 9 வது வார்டு அதிமுக வேட்பாளர் கீதா சுப்பிரமணியன் அக்கட்சியில் இருந்து விலகி திமுக வில் இணைந்தார்.



நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்.பி.வேலுமணி தர்ணா

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் அதிமுக எஸ்.பி.வேலுமணி தலைமையில் தர்ணா போராட்டம் 

தமிழ்நாட்டில் பாஜக கட்சியால் வால் ஆட்ட கூட முடியாது - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் பாஜகவால் ஆளுமை செலுத்த முடிகிறது ஆனால் தமிழகத்தில் வால் ஆட்ட முடியவில்லை காரணம் அவர்கள் வாலாட்டினால் வாலை ஒட்ட நறுக்க கூடிய ஆட்சி மற்றும் திமுக கூட்டணி இங்கு உள்ளது என்று கடலூரில் விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். 



TN Urban Local Body Election : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்..!

தமிழ்நாட்டில் நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை உள்பட 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள் மற்றும் கடம்பூர் தவிர்த்து 489 பேரூராட்சிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற இருக்கிறது. 

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று 3ம் கட்ட பயிற்சி...!

சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று 3வது மற்றும் இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இன்று நடக்கும் பயிற்சி வகுப்பில் அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி மையங்கள் குறித்து ஆணை வழங்கப்படும். 

TN Urban Local Body Elections 2022: வாக்காளர்களுக்கு பணப்படுவா.. வெளியான வீடியோவால் திருச்சியில் பரபரப்பு..!

திருச்சி மாநகராட்சி 29வது வார்டில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் கமால் முஸ்தபாவுக்கு ஓட்டளிக்குமாறு, பண பட்டுவாடா செய்கின்றனர். திமுக வட்டப்  பிரதிநிதிகளான அலாவுதீன், ஜாபர், முஸ்தபா ஆகியோர், இந்த வார்டுக்கு உட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதிகளில், வாக்காளர்களின் பூத் சிலிப்புகளை வாங்கி, குறித்து வைத்துக் கொண்டு,  500 முதல் 1,000 ரூபாய் வரை பணப்பட்டு வாடாவில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.





TN Urban Local Body Election : 18 வயது மேற்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 50% இலக்கை அடைந்துள்ளோம் : சத்தியபிரதா சாகு தகவல்

18 வயது மேற்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் 50% இலக்கை அடைந்துள்ளோம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு !

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக 19ஆம் தேதி நடைபெறுகிறது.இதற்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. 

உங்களுக்கு உழைப்பதற்கு வாய்ப்பளியுங்கள்- முதலமைச்சர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு வாய்ப்புளியுங்கள். மதச்சார்ப்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சின்னங்கள் தான் உங்களுடைய சின்னங்கள். அவற்றிற்கு வாக்களித்து எங்களை மாபெரும் வெற்றி அடைய வையுங்கள் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சி அனைவருக்கும் விடியல் தரும் ஆட்சி- முதலமைச்சர்

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு அனைவருக்கும் விடியல் தரும் ஆட்சியாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஒரு ஊராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் விகிதம் அதிமுக ஊழல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு ஊராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் விகிதம் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 12 ஆயிரம் ஊராட்சிகளில் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர்- முதலமைச்சர்

திருவாரூரில் ஓடாமல் இருந்த தேரை ஓட வைத்தவர் மட்டுமல்ல, நெல்லையப்பர் கோயிலில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டவர் தான் நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மன்னர் ஆட்சிக்காலத்திலும் எழுச்சியுடன் இருந்த நெல்லை- முதலமைச்சர்

மன்னர் ஆட்சிக்காலத்திலும் நெல்லை சீமை எழுச்சியுடனும் உணர்ச்சியுடனும் இருந்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் புரட்சி கனலுக்கு வித்திட்டது நெல்லை சீமை- முதலமைச்சர்

முதலாவது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேரறிஞர் அண்ணா நெல்லை வந்து எழுச்சியை ஏற்படுத்தினார்.மேலும் அண்ணாவுடன் இளைஞர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் புரட்சி கனலை ஏற்படுத்த நெல்லை சீமை வித்திட்டது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்திய சுதந்திரத்தில் மட்டுமல்லாமல், திமுக வரலாற்றிலும் நெல்லை முக்கியமான இடம்: முதலமைச்சர்

இந்திய சுதந்திர வரலாற்றில் மட்டுமல்லாமல் திமுக வரலாற்றிலும் நெல்லை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நெல்லை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரச்சாரம் !

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் பரப்புரை செய்து வருகிறார். 

கடலூரில் வாக்குச்சாவடியாக செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை !

கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என்று  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி அறிவித்துள்ளார். 

பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக, பாமக போன்ற கட்சிகள் இன்னும் சில நாட்களில் காணாமல் போய்விடும்.- திருமாவளவன் !

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கடலூரில் உள்ளாட்சித் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது, “தமிழகத்தில் கலைஞருக்கு பிறகு திமுக அழிந்துவிடும் என அனைவரும் கூறிய நிலையில்,  பாஜக போன்ற சனாதன கட்சிகளிடம் இருந்து சுனாமி போல  முக ஸ்டாலின் அவர்கள் திமுக வையும் தமிழ்நாட்டையும் சேர்த்து காப்பாற்றி உள்ளார். பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக, பாமக போன்ற கட்சிகள் இன்னும் சில நாட்களில் காணாமல் போய்விடும் ” எனத் தெரிவிஹ்துள்ளார்.


"சொன்னதை செய்யலைன்னா இரண்டே ஆண்டில் ராஜினாமா” - பாஜக வேட்பாளர் வாக்குறுதி

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 5 - வது வார்டில்  பா.ஜ.க வேட்பாளர் சதீஸ் போட்டியிடுகிறார். இவர்தான் இந்த வாக்குறுதியை கொடுத்துள்ளார். அதன்படி, “நான் உங்களுக்கு சொன்ன வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, செப்டிக் டேங் கிளீன் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து முடிப்பேன். என்னை நம்பி ஓட்டு போடுங்கள். தேவையான வசதிகளை செய்து தருகிறேன்” எனக் கூறியுள்ளார். 


கோவை மாவட்ட மக்களை நம்பவே மாட்டேன்- பரப்புரையில் உதயநிதி !

கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்தார். அதில், “கூட்டமாக திரண்டிருப்பதை பார்க்கும் போது திமுக கூட்டணிக்கு வெற்றியை கொடுப்பீர்கள் என தெரிகிறது. ஆனால் கோவை மாவட்ட மக்களை நம்பவே மாட்டேன்.வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம் என சொல்றீங்க, செஞ்சீங்களா?” எனப் பேசியுள்ளார். 


தேர்தல் பணியில், சென்னையில் மட்டும் 18,000 போலீசார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணியில், சென்னையில் மட்டும் 18,000 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர்

மதுரை: சோழவந்தான் பேரூராட்சி 15வது வார்டு அதிமுக வேட்பாளர் P.ஜெனகராசன், சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் தலைமையில்  திமுகவில் இணைந்தார்.

சினிமாவில் வரும் ஒருநாள் முதல்வரை போல ஒரே நாளில் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது’ -ப.சிதம்பரம் பிரச்சாரம்! -

‛‛தி.மு.க வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று தான் ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என கூறியது. கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது’’ என பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசினார்

தஞ்சாவூர் அய்யம்பேட்டை பேரூராட்சியின் 9-வது வார்டு திமுக வேட்பாளர் அனுசுயா மாரடைப்பால் மரணம்

தஞ்சாவூர் அய்யம்பேட்டை பேரூராட்சியின் 9-வது வார்டு திமுக வேட்பாளர் அனுசுயா மாரடைப்பால் மரணம்





பிரச்சாரத்தில் பதம் பார்த்துவிட்டு... நேரில் பரஸ்பரம் நட்பு பாராட்டிய அமைச்சர் நேரு-எச்.ராஜா!

திருச்சி பிரச்சாரத்தில், அமைச்சர் கே.என்.நேருவும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் நேரில் சந்தித்து ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நட்பு பாராட்டி நலம் விசாரித்துக் கொண்டனர்.





எங்களை ஏன் இன்னும் பாஜகவின் B டீம் எனன அழைக்கிறீர்கள் - சீமான்


தப்பித்தவறி அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால், தமிழ்நாட்டை இபிஎஸ்-ஓபிஎஸ் ஆண்டிருக்க மாட்டார்கள்; எச்.ராஜா தான் ஆண்டிருப்பார்’ - திருமா பேச்சு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திருச்சியில் பிரச்சாரம் செய்தார். 17வது வார்டில் அவர் பிரச்சாரம் செய்து பேசினார்





‛பெரியாரின் பேரன்... அண்ணாவின் தம்பி... கலைஞரின் பிள்ளை... ஸ்டாலின் இருக்கும்வரை...’ திருச்சியில் திருமா பிரச்சாரம்!

‛பெரியாரின் பேரன்... அண்ணாவின் தம்பி... கலைஞரின் பிள்ளை... ஸ்டாலின் இருக்கும்வரை...’ திருச்சியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பிரச்சாரம்!

கோவை : வீடு வீடாக குப்பை சேகரித்தபடி வாக்குசேகரித்த பாஜக வேட்பாளர்

39 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகள் முறையாக சேகரிப்பதில்லை என பொதுமக்கள் தெரிவித்த நிலையில், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்தபடி சௌமியாராணி வாக்கு சேகரித்தார்.

இறுதி நாள் பிரச்சார விறுவிறுப்பு.. தூத்துக்குடியில் அதகளப்படுத்தும் சுயேச்சைகள்..

நாங்க என்ன சும்மாவா.. என அதகளப்படுத்தும் சுயேச்சைகள்





இறுதி கட்டத்தில் தேர்தல் பிரச்சாரம்.. குடுகுடுப்பை அடித்தும், பானி பூரி போட்டுக்கொடுத்தும் வாக்கு சேகரிக்கும் கடலூர் வேட்பாளர்கள்.

இறுதி கட்டத்தில் தேர்தல் பிரச்சாரம்.. குடுகுடுப்பை அடித்தும், பானி பூரி போட்டுக்கொடுத்தும் வாக்கு சேகரிக்கும் கடலூர் வேட்பாளர்கள்

கோவை : பரிசுப் பொருட்கள் வழங்குவதாக திமுக வேட்பாளர் மீது புகாரளித்த இருவர், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கம்..

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 97 வது வார்டில் திமுகவினர் வரம்பு மீறி செயல்படுகின்றனர். திமுக வேட்பாளர் நிவேதா மாவட்ட செயலாளர் சேனாதிபதியின் மகள் என்பதால் தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு அதிகாரிகள் செயல்படுகின்றனர். 3 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், 97 வது வார்டில் மட்டும் ஏராளமான வாகனங்கள் தேர்தல் பணிக்காக சுற்றி வருகின்றன. அந்த வார்டில் உள்ள வாக்காளர்களுக்கு குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் கொடுப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சுயேச்சை வேட்பாளரை விலைக்கு வாங்கி, அவரது பரப்புரை வாகனத்தில் நிவேதா உருவபடம் பொறித்த பேனர்களை கட்டி நிவேதாவிற்கு வாக்களிக்குமாறு விளம்பரம் செய்து வருகின்றனர். 97 வது வார்டில் மட்டும் 3 கோடி ரூபாயை தாண்டி திமுகவினர் செலவு செய்து இருக்கின்றனர். அதனால் தேர்தல் நியாயமாக நடைபெறாது. எனவே 97 வது வார்டில் மட்டும் தேர்தலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நிரஞ்சனா தெரிவித்தார்.





திருவண்ணாமலை; நான்கு நகராட்சிகளிலும் அதிமுக திமுகவுக்கு நெருக்கடி.. நகரமன்ற தலைவர் பதவி யாருக்கு?

Local Body Election 2022: தேர்தல் வாக்குறுதிகளை பாண்டு பேப்பரில் அச்சிட்டுகொடுக்கும் பாஜக பெண் வேட்பாளர்... சென்னையில் நூதன பிரச்சாரம்

சென்னை வடபழனி / கோடம்பாக்கம் வார்டு 131-ல் போட்டியிடும் பாஜக போட்டியாளர் கிருத்திகா நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.”பி.காம் படித்திருக்கும் நான் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். என்னை வெற்றி பெறச் செய்தால் நேர்மையான முறையில் முழு நேரம் மக்கள் சேவை செய்வேன்” என்ற வாசகங்கள் அடங்கிய பிரச்சார அறிக்கையை மக்களுக்கு வழங்கி வருகிறார். மேலும், 10 ரூபாய் மதிப்பாலான பாண்டு பேப்பரில் தனது தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பிட்டுள்ளார். 





TN Urban Local Body Election : கோவை : கிறிஸ்துவ வாக்காளர்களை கவர சிலுவையுடன் கூடிய ஜெபமாலை கொடுத்த பாஜக வேட்பாளர்..



Local Body Election 2022: "வரவேற்பு நல்லாத்தான் தர்றீங்க, ஆனா வெற்றி மட்டும் கொடுக்க மாட்டேங்கறீங்க" - உதயநிதி ஸ்டாலின்

சேலம் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து. சேலம் மாவட்டம் ஆத்தூர், தம்மம்பட்டி, சேலம் கோட்டை, ஆட்டையாம்பட்டி மற்றும் சங்ககிரியில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.





Local Body Election 2022 : மதுரை : மாஸ்டர் பட பாணியில் ஓடிவந்து பேருந்தில் ஏறி பிரச்சாரம் செய்த டூப்லிகேட் விஜய் !

மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக  88- வது வார்டில் போட்டியிடும் பெண் வேட்பாளர் நாகேஸ்வரி ஆதரித்து கேரளாவிலிருந்து நடிகர் விஜய் தோற்றத்தில் உள்ள நபரை அழைத்து வந்து விஜய் ரசிகர்கள் வார்டு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.





தேர்தல் வாக்குறுதிகளை பத்திரப்பதிவு செய்த பாஜக பெண் வேட்பாளர்... சென்னையில் நூதன பிரச்சாரம்

தேர்தல் வாக்குறுதிகளை பத்திரப்பதிவு செய்த பாஜக பெண் வேட்பாளர்... சென்னையில் நூதன பிரச்சாரம். 16 குறிப்புகள் கொண்ட வாக்குறுதி பட்டியலை ஜெராக்ஸ் எடுத்து மக்களுக்கு வழங்கி வருகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் இப்படி புதுவிதமான தேர்தல் பிரச்சார யுக்தையை வேட்பாளர்கள் கையில் எடுத்து வருவது வழக்கமாகிவிட்டது. மக்களின் நம்பிக்கையை பெற வேட்பாளர் கிருத்திகா பாண்டு பேப்பர் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்.

TN Urban Local Body Election : நகர்புற உள்ளாட்சி தேர்தல் : இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் 19-ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுகிறது.

கும்பகோணத்தில் கோரிக்கையை முத்திரைதாளில் அச்சிட்டு வழங்கி வாக்கு சேகரிக்கும் சுயேச்சை வேட்பாளர்

கும்பகோணத்தில் கோரிக்கையை முத்திரைதாளில் அச்சிட்டு வழங்கி வாக்கு சேகரிக்கிறார் சுயேச்சை வேட்பாளர் ஒருவர்.- அதுமட்டுமின்றி,கும்பகோணம் மாநகராட்சியில் முதல் மேயராவது திமுகவா-அதிமுகவா என்னும் கேள்வி எழுந்துள்ளது


 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை பெரியகுளத்தில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க இன்று (17.2.22) காலை 8.30 மணியளவில் பெரியகுளம் நீரூற்று அருகில் பிரச்சாரம் செய்கிறார். அதனை தொடர்ந்து தேனி, பூதிப்புரம், பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். 

Background

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 


தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுபெறும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது 17.2.2022 மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது.


தேர்தல் பிரச்சாரம் முடிவிற்கு வந்த பின்னர், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத வெளியில் இருந்து அழைந்து வரப்படம் அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவரும் அந்த உள்ளாட்சி பகுதியில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும், அவ்வாறு வெளியேறாதவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தினால் தெரிவிக்கப்படுகிறது. 


தமிழ்நாட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளும், அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ம.க., நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதிமய்யம் ஆகிய கட்சியினர்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பகுதி மக்களிடமும் காணொலி காட்சி மூலமாக தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.