தமிழ்நாட்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியானது ( GSDP ) 23, 64, 514 கோடியாக இருக்கிறது. இது , கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 14 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு மார்ச் 31 நிறைவடைந்த நிதி ஆண்டிற்கான , தமிழ்நாடு அரசு மீதான மாநில நிதி தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வருவாய் அதிகரிப்பு:
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “ 2022-23 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ( GSDP ) 23, 64, 514 கோடியாக இருக்கிறது. இது , கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
தனிமனித உற்பத்தி அடிப்படையில் ( Per Capita GSDP ) பார்க்கும் போது ரூ. 3,08,020 கோடி என்ற மதிப்பில் உள்ளது. இது தேசிய சராசரி அளவான 1,96,983 கோடி உள்ள நிலையில், தேசிய சராசரியை விட 56 சதவிகிதம் தமிழ்நாடு மாநிலம் உள்ளதை பார்க்க முடிகிறது.
2021-22 ஆம் ஆண்டில் ரூ. 46, 538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 2022-23 ஆண்டில் ரூ. 36, 215 கோடியாக குறைந்து உள்ளது.
போக்குவரத்து துறை:
2017 ஆம் ஆண்டிற்கு முன்பு , தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தின் கடன் மதிப்பானது, 6,467 கோடியில் இருந்து, மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 21, 980 கோடியாக உள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் செலவினமானது, 55.20 சதவிகிதம் முதல் 63.5 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாகவும், போக்குவரத்து கழக ஊழியர்களை வேறு பணிக்கு அனுப்பியதால் , ரூ.495 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகா , கேரளா போக்குவரத்து கழகங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் செலவு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மின்னணு ஏல செயல்முறைக்கான இலவச இணைய முகப்பை பயன்படுத்தாததால் ரூ. 17.82 கோடி கூடுதல் செலவானதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.