TN Mayor Election Result 2022 LIVE: கூட்டணிக்கு எதிராக தேர்வானவர்கள் பதவி விலக வேண்டும்.. குற்ற உணர்ச்சியால் , நான் குறுகி நிற்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
TN Mayor Election Results 2022 LIVE Updates: மேயர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டநிலையில், அதற்கான தேர்தல் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருக்கிறது.
நாகை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மறைமுக தேர்தலில் 2 நகராட்சியையும் 2 பேரூராட்சியையும் திமுக கைப்பற்றியது: தலைஞாயிறு பேரூராட்சியை அதிமுகவும், திட்டச்சேரி பேரூராட்சியை சுயேட்சை கைப்பற்றினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. நாகர்கோவில் மாநகர முதல் மேயராக திமுக வை சேர்ந்த மகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மயிலாடி பேரூராட்சியில் உறுப்பினர் ஒருவர் வராததால் தேர்தல் ஒத்திவைப்பு.
தலைமையின் உத்தரவை மீறி தோழமைக்கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு வென்ற தி.மு.க. போட்டி வேட்பாளர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றிய நிலையில் துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இடைக்கழி நாடு பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு. பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கணபதி வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், பெரும்பான்மைக்கு வாக்களிக்க11 பேர் வர வேண்டிய சூழ்நிலையில், 10 பேர் மட்டும் வந்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
பல்வேறு இடங்களில் திமுக போட்டி வேட்பாளர்கள் போட்டியிட்டது வருத்தம் அளிப்பதாக சிபிஎம்-ன் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மேலும், கூட்டணி கோட்பாட்டினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளதாகவும், தலைமையின் கட்டுப்பாட்டை மீறி பதவிக்காக திமுக போட்டி வேட்பாளர்கள் முறைகேடாக செயல்பட்டதாகவும், பதவிக்காக திமுகவினர் இப்படி செயல்பட்டது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல என்றும் கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சி துணை மேயர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 21 மாநகராட்சி துணை மேயர் பதவிகளில் திமுக 15, காங்கிரஸ்2, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றனர்.
குடியாத்தம் நகராட்சி துணைத் தலைவராக அதிமுகவை சேர்ந்த பூங்கொடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
நாகர்கோவில் மாநகராட்சியின் துணை மேயராக திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் மேரி பிரின்ஸி வெற்றி பெற்றார்.
திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவராக திமுக வேட்பாளர் ஆர். எஸ்.பாண்டியன் போட்டியின்றி தேர்வு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு துணைத்தலைவர் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் திமுக வெற்றி.
ஓசூர் மாநகராட்சி திமுக சார்பில் துணை மேயர் பதவிக்கு போட்டியிட்ட ஆனந்தைய, மாநகராட்சியின் முதல் துணை மேயர் ஆக வெற்றி பெற்றார்
கடலூர் மாநகராட்சியின் துணை மேயராக விசிகவைச் சேர்ந்த தாமரை செல்வன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல், கரூர் மாநகராட்சியின் துணை மேயராக திமுகவை சேர்ந்த தாரணி சரவணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயராக திமுகவை சேர்ந்த ஜி.காமராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சியின் துணை மேயராக காங்கிரஸை சேர்ந்த குமரகுருநாதன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியின் துணை மேயராக திமுகவைச் சேர்ந்த மகேஷ் குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சியின் துணை மேயராக மதிமுகவை சேர்ந்த சூர்யகுமார் போட்டியின்றி தேர்வு
நெல்லை மாநகராட்சியின் துணை மேயராக திமுகவை சேர்ந்த கே.ஆர்.ராஜூ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுக வேட்பாளர்கள் சிலர் தலைமையின் முடிவிற்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றது தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக ராமநாதன் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் ஆணையை சரவணகுமார், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சி துணை மேயரானார் வெற்றி செல்வன்.
திருச்சி மாநகராட்சியின் துணை மேயராக திவ்யா தனக்கோடி பதவியேற்றார்.
மல்லூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இன்று காலை நடந்த பேரூராட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் லதா தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தலைவர் லதா உள்ளிட்ட 7 பேரும் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். புதியதாக திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி மறைமுக தலைவர் தலைவர் தேர்தல் மாற்று தேர்தல் அதிகாரி மூலம் நடந்தது - மொத்தம் 27 பேர் உறுப்பினர்களில் அதிமுக 10 , அமமுக 5 என மொத்தம் 15 பேர் தலைவர் தேர்தலில் பங்கேற்றனர் . திமுக , காங்., உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை - அதிமுக சார்பில் சுந்தரலிங்கம் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு இதனால் தேவகோட்டை நகராட்சியை மீண்டும் அதிமுக கைப்பற்றி உள்ளது இதனால் அதிமுக அமமுக இனைந்து செயல்பட வேண்டும் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தேவகோட்டை நகராட்சி தலைவர் தேர்தலில் அதிமுகவை அமமுக ஆதரத்து அதிமுக அமமுக இனைந்து செயல்பட வேண்டும் என்று அச்சாரம் போட்டுள்ளனர்.
தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சியை அமமுக கூட்டணியுடன் அதிமுக கைப்பற்றியுள்ளது.
திமுக அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டதற்கும், கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் திமுகவினர் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் , அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் திடீர் ஆலோசனை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி மறைமுக தலைவர் தலைவர் தேர்தல் மாற்று தேர்தல் அதிகாரி மூலம் தொடக்கம் - மொத்தம் 27 பேர் உறுப்பினராக உள்ள நிலையில் அதிமுக 10 , அமமுக 5 என மொத்தம் 15 பேர் பெருபான்மையாக, தேர்தல் நடக்கும் அறையில் உள்ளனர் திமுக , காங்., உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை
திருச்சியின் முதல் ஆண் மேயராக பதவியேற்ற அன்பழகனுக்கு அங்கியை அணிவித்த அமைச்சர்கள் கே.என். நேரு – அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்னூர் பேரூராட்சித் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதால் ஒத்திவைப்பு.
கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுக தலைமை அறிவித்த விஜயகுமாரை எதிர்த்து அதே கட்சியை சார்ந்த பரமேஸ்வரன் மனு தாக்கல். இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனையடுத்து இரு தரப்பினரும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஒத்திவைப்பு
நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள பேரூராட்சிகளில் வெற்றி பெற்றோர் விபரம்:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் இழுபறி நீடித்த நிலையில் தற்போது அதிமுக ஆதரவு வேட்பாளர் ராமலெஷ்மி வெற்றி பெற்றதாக அறிவிப்பு
10 சுயேட்சைகள் வென்ற கோவை மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் பதவியை சுயேட்சைகள் ஆதரவுடன் கைப்பற்றிய சுயேட்சை வேட்பாளர் சசிகுமார்.
சுயேச்சை வேட்பாளரும், இந்த பேரூராட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான சசிக்குமார் 9 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் 10 வார்டுகள் சுயேட்சைகளும், 5 திமுகவும் வெற்றிப்பெற்றிருந்தது.
கரூர் புலியூர் பேரூராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூட்டணியில் பேரூராட்சி தலைவர் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றி
செங்கோட்டை நகராட்சியில் வாக்கு பெட்டிகளை திமுகவினர் சேதப்படுத்தியதாக அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருமத்தம்பட்டி நகராட்சி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மீஞ்சூர் பேரூராட்சியில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றி. அதிகாரப்பூர்வ வேட்பாளர் தோல்வி
காஞ்சிபுரம் மேயராக திமுகவின் மகாலட்சுமி யுவராஜ் பதவி ஏற்றுக்கொண்டார்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் உள்ள மொத்தம் 8 வார்டுகளில் திமுக மற்றும் அதிமுக 4க்கு 4 என்ற விகிதத்தில் சமபலத்தில் உள்ளது.
இந்நிலையில் பேரூராட்சி தலைவர் தேர்தலை திமுக புறக்கணிப்பு காரணமாக தேர்தல் ஒத்திவைப்பு என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டில் தற்போது நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க 10 வார்டுகளிலும், தி.மு.க 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று மறைமுக தேர்தல் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது தி.மு.க. வினர் வெளிநபர் உள்ளே வந்ததாக கூறி தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர், இந்த தகவல் அறிந்த தி.மு.க ஆதரவாளர்கள் வெளியே போலீசாரிடம் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். தொடர்ந்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலிசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
தொடர்ந்து தி.மு.க கவுன்சிலர்கள் ஆவணங்களை கிழித்ததாக கூறப்படுகிறது, அதன்படி தேர்தலை முறைப்படி நடத்த தேர்தல் அதிகாரி அலுவலரின் கோரிக்கையை ஏற்று தி.மு.க. கவுன்சிலர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர், இதனால் அலுவலகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி, திமுக கூட்டணியில் விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், மறைமுக தேர்தலில் திமுகவை சேர்ந்த சாந்தி புஷ்பராஜ் வெற்றி பெற்றுள்ளார். இதனால் கூட்டணிக்கு துரோகம் செய்ததாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இடைகழுநாடு பேரூராட்சி தலைவராக 23 வயதான வேட்பாளர் சம்யுக்தா தேர்வானார். அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உதவியுடன் வெற்றி
செய்யாறு நகராட்சிக்கு திமுக சார்பில் போட்டி வேட்பாளராக களமிறங்கிய மோகன வேலு 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் விஸ்வநாதன் 11 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி தலைவராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை, அதே கட்சியைச் சேர்ந்த போட்டி வேட்பாளர் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள். இதில் 7 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 5 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 3 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் இன்று தலைவருக்கான நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட லதாவும், அதிமுக சார்பில் கவி பிரியாவும் போட்டியிட்டனர். திமுக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் லதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி நகர் மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த உமாமகேஸ்வரி மற்றும் அதிமுக வை சேர்ந்த முத்துலெட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் இருவரும் சம வாக்குகள் வாங்கியதால் குழுக்கல் நடத்தப்பட்டது. குழுக்கல் முறையில் திமுக வை சேர்ந்த உமா மகேஸ்வரி வெற்றி பெற்றார். இதனால் அதிமுக வசமிருந்த சங்கரன்கோவில் நகராட்சி 15 ஆண்டுகள் பின் திமுக வசமானது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி தலைவர் தேர்தலில் முடிவு அறிவிக்கப்பட இருந்த நிலையில் திடீரென எழுந்த பிரச்சனை காரணமாக முடிவு அறிவிக்கப்படாத நிலையில் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர், முடிவுகளை அறிவிக்க கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டு அதிமுக மற்றும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் தலைவர் பெண்ணாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 33 வார்டுகளில் திமுக 19 இடங்களிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 இடங்களிலும் அதிமுக 7 இடங்களிலும் அமமுக 2 இடங்களிலும் பாஜக ஒரு இடத்திலும் சுயேச்சைகள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் 22வது வார்டு கவுன்சிலர் சற்குணம் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கலின் போது முன்மொழிய காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் மட்டுமே இருந்தார். வழிமொழிய திமுகவினர் யாரும் முன்வரவில்லை. மேலும் திமுக வின் சார்பில் 10-ஆவது வார்டு கவுன்சிலர் ரேணுபிரியா அவர்கள் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். இதனை அறிந்த காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சற்குணம் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யாமல் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். மீண்டும் அவர் மனுத் தாக்கல் செய்யச் சென்றபோது நேரம் முடிந்து விட்ட காரணத்தினால் இவரின் மனுவினை தேர்தல் அலுவலர் நிராகரித்து விட்டார். கட்சித் தலைமை காங்கிரசுக்கு ஒதுக்கியும் அவர்களை எதிர்த்து திமுக போட்டியிட்டதால் காங்கிரஸ் கட்சியினர். நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திமுக சார்பில் ரேணுப்பிரியா பாலமுருகன் அவர்கள் மட்டுமே மனுத் தாக்கல் செய்து இருந்தமையால் நகராட்சி தலைவராக அவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவின் சார்பில் வெற்றி பெற்ற 7 வேட்பாளர்களும் தேர்தலை புறக்கணித்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி தேர்தலில் தேர்தல் நடத்தும் அலுவலர் பணிக்கு வராததால் தேர்தல் ரத்தாகும் வாய்ப்பு. அமமுக ஆதரவுடன் அதிமுக நகராட்சியை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
குமாரபாளையம் நகராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை வீழ்த்தி சுயேச்சை வேட்பாளர் நகராட்சி தலைவராக வெற்றி பெற்றார்
வெள்ளளூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு. பேரூராட்சி ஆணையர் அறிவிப்பு. தேர்தல் நடத்தக்கூடாது என ஒருதரப்பினர் வாக்குவாதம். பதட்டத்தால் தேர்தல் ஒத்திவைப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சி திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ் வெற்றி. அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த சூர்யா ஷோபன் குமர் தோல்வி.
ஆம்பூர் நகராட்சி தேர்தலை நடத்தக்கோரி 26 கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக நகராட்சி ஆணையர் அறிவிப்பு
செஞ்சி பேரூராட்சி தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியார் மஸ்தான் பதவியேற்பு
கடலூர் மாநகராட்சியின் மேயராக திமுக வேட்பாளர் சுந்தரி வெற்றி பெற்றார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 3வது வார்டு கவுன்சிலர் ஜான்சிராணி குலுக்கல் முறையில் வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை திருமங்கலம் நகராட்சியில் தலைவர் தேர்தலில் பெரும்பாலான வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்ததால் மறுதேதி குறிப்பிடாமல் தலைவர்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் நகராட்சியில் 100 ஆண்டுகளுக்கு பிறகு முதல் பெண் நகரமன்றத் தலைவராக தமிழ்ச்செல்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று மறைமுக தேர்தல் நடந்த நிலையில், திமுக கவுன்சிலர் தமிழ்ச்செல்வி மட்டுமே தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் எதிர்த்து மனு தாக்கல் செய்யாத நிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா அறிவித்தார்.
நாகர்கோவில் மேயர் தேர்தலில் திமுக்பா வேட்பாளர் மகேஷ் வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த மீனாதேவ் தோல்வியடைந்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியின் நகர் மன்ற தலைவரின் மறைமுக தேர்தலில் திமுக அறிவித்த வேட்பாளர் க.செல்விக்கு எதிராக மற்றுமொரு திமுக வேட்பாளர் சகுந்தலா விருப்ப மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் திமுக அறிவித்த செல்வியின் ஆதரவாளர்கள் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, நகராட்சி அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது
தஞ்சை மாநகராட்சி மேயராக சண். ராமநாதன் தேர்வு செய்யப்பட்டார்
நெல்லை மாநகராட்சிக்கு மேயராக P.M.சரவணன், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் அதிகாரியுமான விஷ்ணு சந்திரன் அறிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் வேட்பாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக திமுக பெண் வேட்பாளர் எதிர்த்து போட்டியிட்டதில் வெற்றி அடைந்தார் .
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் போதிய உறுப்பினர்கள் வராததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் 23வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட இளமதி தேர்வு செய்யப்பட்டநிலையில், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செங்கோல் வழங்கி மேயருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் மேயர் பதவிக்கு திமுக சார்பில் மகாலட்சுமி யுவராஜ் அறிவித்த நிலையில் திமுக சார்பில் மேலும் ஒருவர் சூர்யா சோபன் குமார் மேயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை : திருமங்கலம் நகராட்சி மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி மேயராக வசந்தகுமாரி தேர்வு செய்யப்பட்டார்.
கடலூர் மேயர் பதவி தனது மனைவிக்கு கிடைக்காததால் மாவட்ட பொருளாளர் VSL குணசேகரன் தூக்க மாத்திரை சாப்பிட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.
நேற்று இரவு தி.மு.க. கவுன்சிலர்கள் 20 பேர் மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 8 கவுன்சிலர் என மொத்தம் 28 கவுன்சிலர்கள் மாயமானதாக தகவல் பரவியது.
நெல்லை மாநகராட்சியின் மேயராக திமுகவை சேர்ந்த சரவணன் தேர்வு செய்யப்பட்டார்.
சேலம் மாநகராட்சியின் மேயராக திமுகவை சேர்ந்த ராமசந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ஈரோடு மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த நாகரத்தினம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
சிவகாசி மாநகராட்சி மேயராக சங்கீதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுகவினர் - காவல்துறைக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரவணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவை சேர்ந்த உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த சுஜாதா தேர்வு செய்யப்பட்டார்.
கரூர் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த கவிதா கணேசன் தேர்வு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
திருப்பூர் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த சுந்தரலட்சுமி போட்டியின்றி தேர்வானார்.
மதுரை மாநகராட்சி மேயராக திமுகவின் இந்திராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ராஜபாளையம் நகராட்சி தலைவராக பவித்ரா ஷ்யாம் தேர்வு செய்யப்பட்டார்.
கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயராக கல்பனா ஆனந்தகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயரானார் கல்பனா என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த இளமதி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் பிரியா ராஜன் ரிப்பன் மாளிகைக்கு வந்து கொண்டிருக்கிறார்.
மேயர் நகரமன்ற தலைவர் பேரூராட்சி தலைவர்களின் மறைமுக தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் கடலூர் மாநகராட்சி ஒருதரப்பு திமுக கவுன்சிலர்கள் 15 க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மஞ்சகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் சொகுசு விடுதியிள் தங்கியுள்ளனர் இதனை அறிந்த கடலூர் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த கவுன்சிலர் களை வெளியில் விடாமல் போலீசார் தடுத்து நிறுத்துதியதாக திமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கவுன்சிலர்களுக்கு போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 500 கிகும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மரக்காணம் அருகே உள்ள தனியார் விடுதியில் கடலூர் மாநகராட்சியில் வெற்றி பெற்ற இருதரப்பு வார்டு கவுன்சிலர்கள் தங்க வைப்பு. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட போலீஸார் சம்பவ இடத்தில் குவிப்பு.
Background
ஒருவழியாக உள்ளாட்சி தேர்தல், பல கட்டங்களாக முடிந்து, தமிழ்நாடு முழுக்க, ஊரக உள்ளாட்சி முதல், நகர் புற உள்ளாட்சி வரை மக்கள் பிரதிநிதிகளால் நிரம்பிவிட்டன. ஆண்டு கணக்கில் காலியாக இருந்த கவுன்சிலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாநகராட்சிகளில், கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது மேயர் மற்றும் துணை மேயர் போட்டிக்கான வேட்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
10 மாநகராட்சிகளாக தேர்தலை சந்தித்த தமிழ்நாடு, நீண்ட... இடைவெளிக்குப் பின் அதிகரிக்கப்பட்டு 21 மாநகராட்சிகளாக தேர்தலை சந்தித்துள்ளது. 21 மேயர்கள் தமிழ்நாட்டில் ஓரிரு நாளில் பொறுப்பேற்க உள்ளனர். துணை மேயர்களும் அதே எண்ணிக்கையில் வருவார்கள்.
இந்தநிலையில், மேயர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டநிலையில், அதற்கான தேர்தல் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -