நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ‘அவர் போட்டியிடவில்லை’ என்று பரவிய தகவல் பொய்யானது என தங்கர் பச்சான் மறுப்பு தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

கடலூரில் களமிறங்கும் தங்கர்பச்சான்:

தமிழில் வெளியான ’அழகி’, ’ஒன்பது ரூபாய் நோட்டு’ ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர். சமீபத்தில், ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் பிரபல இயக்குநர் பாரதிராஜா நடித்திருந்தார். இந்நிலையில், தங்கர்பச்சான் அரசியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.

Continues below advertisement

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. கடலூர் தொகுதியில் தங்கர்பச்சான் போட்டியிடுவதாக பா.ம.க. அறிவித்திருந்தது. இருப்பினும், ‘தங்கர் பச்சான் போட்டியிடவில்லை.’ என செய்தி பரவி வந்தன. இதற்கு தங்கர் பச்சான் மறுப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்துள்ளார். 

கடலூரில் போட்டியிடவில்லையா?

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,” கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்!” என்று குறிப்பிட்டுள்ளார். 

காஞ்சிபுரம் தொகுதி தவிர்த்து மற்ற  9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  1. திண்டுக்கல் - கவிஞர் திலகபாமா
  2. அரக்கோணம் - கே.பாலு
  3. ஆரணி - கணேஷ் குமார்
  4. கடலூர் - தங்கர் பச்சான்
  5. மயிலாடுதுறை - ம.க ஸ்டாலின்
  6. கள்ளக்குறிச்சி - தேவதாஸ் உடையார்
  7. தருமபுரி - அரசாங்கம்
  8. சேலம்  - அண்ணாதுரை
  9. விழுப்புரம் - முரளி சங்கர்

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, பஞ்சாப் , குஜராத் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

பா.ஜ.க. வேட்பாளர்களின் விவரம்

  1. கோவை- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
  2. தென் சென்னை - முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன்
  3. மத்திய சென்னை - வினோஜ் செல்வம்
  4. வேலூர் - ஏ.சி. சண்முகம்
  5. கிருஷ்ணகிரி- நரசிம்மன்
  6. நீலகிரி - எல்.முருகன்
  7. பெரம்பலூர் - பாரிவேந்தர்
  8. நெல்லை- நயினார் நாகேந்திரன் 
  9. கன்னியாகுமரி -பொன் ராதாகிருஷ்ணன் 

 தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் பரப்புரையை தொடங்கியுள்ளனர்.


மேலும் வாசிக்க..

DMDK Canditaes: விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் போட்டி - தேமுதிக அறிவிப்பு

நெருங்கும் தேர்தல்! தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் - ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!