சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடருக்கான இன்றைய (மார்ச் 22) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


ஜனனி, அஞ்சனாவை அசிங்கப்படுத்தும் உமையாள்:

உமையாள் வீட்டுக்கு அஞ்சனாவை அழைத்து கொண்டு ஜனனியும் சக்தியும் செல்ல அங்கிருந்த நாச்சியப்பன் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஜனனியையும், அஞ்சனாவையும் உமையாள் கேவலப்படுத்துகிறாள். பெற்ற மகள்களை தன்னுடைய குடும்பம் அசிங்க படுத்துவதை பார்த்து அப்படியே அமைதியாக இருக்கிறார்  நாச்சியப்பன். அதை பொறுக்காத அஞ்சனா, சித்தார்த் சட்டையை பிடித்து இழுத்து "நான் பேச வந்தது சித்தார்த் கிட்ட. சொல்லு சித்தார்த்" என அவனை உலுக்கி கேட்க  உமையாள் அஞ்சனாவை மிரட்டுகிறாள். அவர் பேசியதை கேட்டு ஜனனி அதிர்ச்சி அடைகிறாள்.


 




ஈஸ்வரி மற்றவர்களிடம்  ஜீவனானந்தம் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறாள். "ஜீவானந்தம் அவரோட குழந்தைக்காக வரணும். அவரை இங்க கொண்டுவந்து சேக்குறது என்னோட கடமை" என சொல்கிறாள். அதை கேட்டு நந்தினி, ரேணுகா, ஞானம் மற்றும் கதிர் எதுவும் புரியாமல் பார்க்கிறார்கள்.


அஞ்சனாவை காதலிக்கும் சித்தார்த்:

குணசேகரன் தர்ஷியை வைத்திருக்கும் அறையில் இருந்து வெளியே வருகிறார். சக்தியும் ஜனனியும் குணசேகரனிடம் பேசுவதற்காக காத்திருக்கிறார்கள். சக்தி குணசேகரனிடம் சித்தார்த் பற்றி பேசுகிறான். "அந்த பையன் காதலிக்கிறது, ஜனனியோட தங்கச்சி அஞ்சனாவை தான்" அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரனிடம் "ஆமா அவங்க இரண்டு பேருக்கும் தான் கல்யாணம் நடக்கும்" என ஜனனி சொல்ல அதற்கு குணசேகரன் சொன்ன பதிலால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.


 





குணசேகரன் சித்தார்த் அஞ்சனா கல்யாணத்தை ஏதாவது சதி வேலை செய்து நிறுத்தி விடுவார். ஜீவானந்தத்தை தேட முயற்சி செய்யும் ஈஸ்வரியின் முடிவு எந்த அளவுக்கு சாத்தியப்பட போகிறது? குணசேகரன் தான் தர்ஷினியை கடத்தி வைத்து இருந்தார் என்ற உண்மையை தர்ஷினி சொன்னால் மட்டுமே செல்லுபடியாகும். அதற்கு தர்ஷினி பூரணமாக குணமடைய வேண்டும். இனி வரும் எபிசோட்களில் இதற்கான விடை கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

எதிர்நீச்சல் கதைக்களம் விறுவிறுப்பாக பல ஸ்வாரஸ்யங்களுடன், ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. பள்ளியின் படிக்கும் மகளுக்கு திருமணம் செய்து வைக்க அதிரடியாக முடிவெடுப்பது, தந்தையே பெற்ற மகளை ஆள் வைத்து கடத்தி வைக்க சொல்லி அவளை சித்ரவதை செய்ய வைத்தது என சீரியலின் கதைக்களம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.  தொடர்ந்து பெண்கள் எவ்வளவு போராடியும் குணசேகரன் சூழ்ச்சியில் சிக்கி கொண்டு தோற்றுப்போவது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. விரைவில் எதிர்நீச்சல் (Ethirneechal ) சீரியல் பெண்களுக்கு பாசிட்டிவான ஒரு கண்ணோட்டத்தில் நகரும் என எதிர்பார்க்கிறார்கள்.