வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் திரும்பி பக்கமெல்லாம் வேட்பாளர்கள் அவர்களது ஆதரவாளர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.




Malavika Mohanan: காதலன் யார்? - கேள்விக்கு நச் பதில் தந்த மாளவிகா மோகனன்...!


மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 123 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 858 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், அம்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மனுக்கள் சரிவர நிரப்பப்படாதது, கையெழுத்து இல்லாதது, சரியான ஆவணங்கள் இல்லாதது, முன்மொழிவாளர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வேட்புமனு பரிசீலனையில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 838 மனுக்கள் ஏற்கப்பட்டன. மேலும் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் 3 வேட்பாளர்கள் பேட்டியின்றி தேர்வாகிய நிலையில் 835 வேட்பாளர்கள் மாவட்டத்தில் போட்டியிட்டுள்ளனர். 




ABVP Protest | ஏபிவிபி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு - மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம்!


இந்த சூழலில் மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணிசங்கர் ஐயர் இன்று இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மணிசங்கர் ஐயர், தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும், பொதுமக்கள் நல்லது செய்தால் பாராட்டுகின்றனர். ஆனால் தனியே நின்றால்  தேர்தலில் வாக்குகள் அளிப்பதில்லை என்பதை எனது அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். எனவே கூட்டணி என்பது முக்கியமான ஒன்றாகும். 




சொல்றீங்க, செஞ்சீங்களா? கோவை மாவட்ட மக்களை நம்பவே மாட்டேன்' - உதயநிதி ஸ்டாலின்


அதேபோன்று தேர்தலை மனதில் வைத்து கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தை பாரதிய ஜனதா கட்சியை பெரிதாக்கி உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அவரவர் பண்பாட்டிற்கு ஏற்ப உடை அணிந்து கொண்டுள்ளனர். இதனை தடுக்க நினைப்பது தவறான ஒன்றாகும். என்னதான் பிரிவினையை ஏற்படுத்தினாலும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பூஜ்ஜியம் வாக்குகளை மட்டும்தான் பெறும் என விமர்சித்தார்.


ஒளியிலே... தெரிவது... நான் மட்டும் தான்...’ தொடங்கியது முதல் முடியும் வரை ‛சோலோ’ பிரச்சாரம்!