மலையாள திரையுலகின் ஒளிப்பதிவாளர்  கே.யூ. மோகனனுடைய மகள் மாளவிகா மோகனன். மலையாள சினிமாவில் அறிமுகமான மாளவிகா தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த  ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானார். 


இதனையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதன் மூலம் அவருக்கு ரசிகர் வட்டம் பெருக தொடங்கியது. தொடர்ந்து, தற்போது அவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.






இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் ஆக்டீவான மாளவிகா அவ்வபோது ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம். சமீபத்தில் நடைபெற்ற கேள்வி - பதில் செஷனில், ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார். அதில், நீங்கள் எப்படிப்பட்ட காதலரை எதிர்ப்பார்க்கிறீர்கள் என கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு ஒரு வரியில் பதிலளித்த மாளவிகா மோகனன், “பாலின பாகுபாடு காட்டாத ஒருவரை எதிர்ப்பார்த்திருக்கிறேன்” என நச்சென்று தெரிவித்திருக்கிறார்.






முன்னதாக, மாளவிகா மோகனன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரபல ஊடகம் ஒன்றை கண்டித்திருந்தார். அவர் வெளியிட்டிருக்கும் அந்தப்பதிவில், “ சில மாதங்களுக்கு முன்னர், இந்தப் புகைப்படத்தை யாரோ ஒருவர் போட்டோஷாப் மூலம் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதிக அளவு ஷேர் செய்யப்பட்ட இந்தப் புகைப்படத்தை பிரபல ஊடகமும் வெளியிட்டுள்ளது. இது மிகவும் மலிவான பத்திரிக்கை தர்மம். நீங்கள் போலியான புகைப்படத்தை பார்த்தால், புகார் அளிக்க உதவி  செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்தப்பதிவு வைரலானது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண