மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ சுரேந்திர பட்வா, காவல்துறையை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சுரேந்திர பட்வா, ஏன் காவலரை மிரட்டுகிறார், என்ன நடந்தது என்பது குறிப்பு காண்போம்.


மத்திய பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை:


இந்தியாவில் மக்களவை தேர்தலானது, ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் மே 7 ஆம் தேதி அடுத்தகட்ட தேர்தலானது நடைபெறவுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள விதிசா மக்களவை தொகுதியில், மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சௌகான் பாஜக கட்சி சார்பாக வேட்பாளராக களம் இறங்குகிறார். அவர் போஜ்பூர் பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, சிவராஜ் சௌகான் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். பேசி கொண்டிருந்த போதே, பாதுகாப்பிலிர்ந்த காவலர் மகேந்திர சிங் தாகூர் மைக் ஆஃப் செய்ததாக கூறப்படுகிறது. இரவு 10 மணி ஆனதாகவும், அதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி காவலர் மைக் ஆஃப் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


மிரட்டப்பட்ட காவலர்:


இதனால், ஆத்திரமடைந்த சிவராஜ் சௌகான், இன்னும் 10 மணி ஆகவில்லை என தெரிவித்து, மீண்டும் மைக்கை ஆன் செய்யுமாறு தெரிவித்தார், மேலும், காவலரை இங்கிருந்து அகற்றுமாரு தெரிவித்தார். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.


இதையடுத்து, மேடையில் இருந்த எம்.எல்.ஏ சுரேந்திர பட்வா மிகவும் கோபமடைந்தார்.  இங்கே வா, உன்னை திரும்ப வர முடியாத இடத்திற்கு அனுப்பி விடுவேன் என காவலரை மிரட்டினார்.






இதையடுத்து, மைக் ஆன் செய்யப்பட்டது. இந்நிலையில், இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் காட்சி, தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, பாஜக கட்சியின் ஆணவத்தைப் பாருங்கள். சுரேந்திர பட்வா, காவலர் மகேந்திர சிங் தாக்கூரை தவறாக நடந்துகொண்டு மிரட்டுகிறார். மிகவும் அநாகரீகமான மற்றும் கண்டிக்கத்தக்க செயல்" என்று மத்திய பிரதேச காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.


Also Read: ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் துடிக்கிறது - மோடியின் பேச்சால் எழுந்த சர்ச்சை!