வாகனங்கள் மூலம் ஏற்படும் மாசு கட்டுப்பாடு கட்டுப்படுத்த நடவடிக்கை
மாநிலம் முழுவதும் 534 வாகன புகைப் பரிசோதனை மையங்கள் இயங்கி வருவதாகவும் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் வாகனங்களின் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிக்கும் காரணத்தால் காற்று மாசுபாடு ஏற்பட்டு அதனால் நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் பொதுமக்களிடையே ஏற்படுவதாகவும் இதனை கட்டுக்குள் வைக்க மாநிலம் முழுவதிலும் 534 வாகன புகைப் பரிசோதனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காணும் புகைப் பரிசோதனை மையங்களின் தணிக்கையில் 50 புகைப் பரிசோதனை மையங்களில் அங்கீகரிக்கப்பட்ட சோதனை செய்ய வேண்டிய நபர் இல்லாமல் வேறு நபர் பணியில் இருந்தது, உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இயங்கியது. கேமரா பொருத்தப்படாதது, கட்டணம் விகித விவரம் அடங்கிய அட்டவணையை வைக்காமல் இருந்தது, உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கி வந்தது, Calibration Certificate இல்லாமல் இருந்தது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த மையங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனப் புகைப் பரிசோதனை மையங்களின் செயல்பாட்டினை மேலும் மேம்படுத்தவும், புகார்களுக்கு இடமளிக்காத வகையில் தொழில்நுட்பங்களை புகுத்தவும் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் தற்போது PUCC 2.0 Version அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய PUCC 2.0 Version-ல் கீழ்கண்ட முக்கியமான அம்சங்கள்
1. அந்தந்த வாகனப் புகைப்பரிசோதனை மையத்துக்கென தனிப்பட்ட அலைபேசி உரிமதாரரால் பயன்படுத்தப்படும். அந்த அலைப்பேசியில் இந்த PUCC 2.0 Version App-ஐ நிறுவி இயக்க வேண்டும்.
2. இந்த புதிய Version GPS வசதியுடன் கூடியதாகவும். இந்த செயலி நிறுவப்பட்ட அலைபேசி தொடர்புடைய வாகனப் புகைப் பரிசோதனை மையத்திலிருந்து 30 மீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே செயல்படும்.
3. இதன் மூலம் வானப் புகைப் பரிசோதனை செய்யும் போது இரண்டு புகைப்படங்களை (ஒன்று வாகனத்தின் பதிவெண்ணை தெளிவாக காட்டும்படியும் மற்றொன்று வாகனத்தின் பதிவெண் புகைப் பரிசோதனை மையத்தின் பெயர் பலகை அடங்கிய முழுத்தோற்றம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சோதனையாளர் ஆகிய மூன்றும் ஒரு சேர இருக்குமாறு) எடுக்கப்பட வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட நபர் அந்த வாகனத்தை சோதனையிடும் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பதிவையும் பதிவேற்ற வேண்டும். இவை மூன்றையும் (இரண்டு புகைப் படங்கள் மற்றும் ஒரு வீடியோ) பதிவேற்றம் செய்யாமல் இந்த செயலியை பயன்படுத்த இயலாது. இவை பதிவேற்றம் செய்யப்பட்டால் தான் புகைப் பரிசோதனை சான்றிதழினை பதிவிறக்கம் செய்யவோ அல்லது பிரிண்ட் எடுக்கவோ இயலும்.
4. அதைப் போல சோதனை செய்யப்படும் வாகனங்கள் அந்த புகைப் பரிசோதனை மையத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்யப்படுவதை துல்லியமாக காட்டும் புவியிடக் குறியீடு (GPS enabled photo with Latitude, Longitude) இருப்பதனால் சோதனை மையத்திற்கு வாகனங்களை கொண்டு வராமலேயே புகைப் பரிசோதனையை இனி செய்ய இயலாது.
5. மேலும் புகைப் பரிசோதனை மையங்கள் தாங்களாக பயன்படுத்தும் மென்பொருளை இந்த PUCC 2.0 Versionசெயலியை இனி பயன்படுத்த முடியாது. மாறாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கியுள்ள மென்பொருளை தங்கள் கருவியில் பொருத்தினால் மட்டுமே இந்த செயலி செயல்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.