நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. பா.ஜ.க. கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அவர்கள் 290 இடங்கள் மட்டுமே பிடித்தனர். நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக மோடி ஆட்சியமைக்க உள்ளார்.


ஏக்நாத் ஷிண்டே - உத்தவ் தாக்கரே:


நாட்டில் பல வாக்காளர்கள் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சூழலில், சில வாக்காளர்கள் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றனர். இந்த மக்களவைத் தேர்தலில் நாட்டிலே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வாக்காளராக ஏக் நாத் ஷிண்டே  தலைமையிலான சிவ சேனாவின் ரவீந்திரா வைகர் உள்ளார்.


மகாராஷ்ட்ராவில் மிகப்பெரிய கட்சியான சிவசேனா ஏக் நாத் ஷிண்டே – உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த சூழலில், மக்களவைத் தேர்தலில் இரண்டு சிவசேனாவும் மோதிக் கொண்டன.


48 வாக்கு வித்தியாசத்தில் த்ரில் வெற்றி:


மகாராஷ்ட்ராவின் தலைநகரான மும்பை வடமேற்கு தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சார்பாக ரவீந்திராவும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சார்பாக அமோல் கஜனன் கிரிதிகர் இருவரும் போட்டியிட்டனர்.


வாக்குப்பதிவு தொடங்கியது முதலே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் மாறி, மாறி முன்னிலை செல்வதும், பின்னடைவுக்கு செல்வதுமாக இருந்தது. வாக்கெடுப்பின் இறுதியில் ரவீந்திரா 4 லட்சத்து 52 ஆயிரத்து 644 வாக்குகள் பெற்றார். அவருக்கு நெருக்கடி அளித்த கிரிதிகர் 4 லட்சத்து 52 ஆயிரத்து 596 வாக்குகள் பெற்றார். இதனால், கடைசியில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளரான ரவீந்திரா வைகர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று த்ரில் வெற்றி பெற்றார். இதனால், ரவீந்திராவும், அவரது ஆதரவாளர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.


இந்திய நாட்டின் வரலாற்றிலே மக்களவைத் தேர்தலில் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை கொனதலா ராமகிருஷ்ணா, சோம் மாரண்டி இருவரும் தங்கள் வசம் வைத்துள்ளனர். ஆந்திராவின் அனகபள்ளி தொகுதியில் 1989ம் ஆண்டு ராமகிருஷ்ணாவும், 1998ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பீகாரின் ராஜ்மகால் தொகுதியில் சோம் மாரண்டியும் தலா 9 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இந்திய வரலாற்றில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் பெற்ற வெற்றியாகும்.


மேலும் படிக்க: "வெற்றியும் தோல்வியும் அரசியலில் ஒரு பகுதி" கடைசி அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி!


மேலும் படிக்க: Edappadi Palanisamy : ”அடுத்தடுத்து அடி, பத்து தோல்வி” விரக்தியில் எடப்பாடி பழனிசாமி? கலக்கத்தில் அதிமுக தொண்டர்கள்..!