Stock Market Rise: இன்றைய நாள் முடிவில் 785 புள்ளிகள் ஏற்றத்துடன் சென்செக்ஸ் நிறைவடைந்தது. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை வங்கிகள் ஏறுமுகத்துடன் நிறைவடைந்தன.
ஏற்றத்தில் பங்குச்சந்தை:
மக்களவைத் தேர்தலின் முடிவுகளால், இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை பார்க்க முடிகிறது. தேர்தல் முடிவு வெளியான நாளில் 6,000 புள்ளிகள் வரை வீழ்ச்சியை சந்தித்த சென்செக்ஸ் புள்ளிகள், நேற்று 2, 000 புள்ளிகளுக்கும் மேல் ஏற்றத்துடன் நிறைவடைந்து 74, 382 புள்ளிகளில் வர்த்தகமானது.
இந்நிலையில், இன்று மும்பை பங்குச்சந்தை குறியீடான் சென்செக்ஸ் 692 புள்ளிகள் ஏற்றத்துடன் 75,074 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 201 புள்ளிகள் ஏற்றத்துடன் 22, 821 புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகமானது.
லாபமடைந்த நிறுவனங்கள்:
இன்றைய நாளில் நிஃப்டி 50ல் உள்ள ஐடி நிறுவனங்களான டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்டவை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. மேலும், ரிலையன்ஸ், எஸ்.பி.ஐ டாட்டா ஸ்டீல், பவர் கிரிட், மாருதி சுசுகி, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
சரிவை சந்தித்த நிறுவனங்கள்:
ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் முடிவடைந்தன.
இந்நிலையில், வரும் நாட்களில் பங்குச் சந்தையானது ஏற்றத்துடன் தொடர்ந்து செல்லுமா என்று கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால், பாஜக கட்சியானது தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுக்கவில்லை. இதனால், கூட்டணி கட்சியுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், தனிப்பெரும்பான்மை கட்சி ஆட்சியமைக்கும் சூழல் இல்லாத நிலை இந்த முறை ஏற்பட்டுள்ளது.
நிச்சயமற்றத் தன்மையில் பங்குச் சந்தை:
இதனால் நிர்வாகங்களில் , கொள்கைகளில் உறுதித்தன்மை குறைவுத் தன்மை ஏற்படும். இதனால், வரும் காலங்களில் நிச்சயமற்றத்தன்மை நிலவுவதற்கு வாய்ப்பு இருப்பதால், பங்குச்சந்தையின் போக்கு, இன்று ஏற்றத்துடன் காணப்பட்டாலும் வரும் நாட்களில் அரசு போக்கின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் ஏற்றத்துடன் இருக்குமா அல்லது இறக்கத்துடன் இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
நேற்றைய நாளில் 83.37 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று டாலருக்கு எதிராக 10 பைசா குறைந்து ரூ83.47 ஆக உள்ளது.