உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை வகிப்பதாக, காலை 9.30 மணி நேரப்படி, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், 80 தொகுதிகள் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் , இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி 33 இடங்களில் வகிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


மக்களவைத் தேர்தல்: 


இந்தியாவில், 18வது மக்களவைத் தேர்தலானது, கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.  7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலானது, மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்தது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் தொகுதியின் பாஜக வேட்பாளர் போட்டியின்றி களம் கண்டதால், அவரின் வெற்றி உறுதியானது. இந்நிலையில் 542 தொகுதிகளுக்கான  வாக்கு எண்ணிக்கை  இன்று ( ஜூன் 4 ஆம் தேதி ) எண்ணப்பட்டு வருகிறது.


கடுமையான போட்டி:



மக்களவைக்காக நடைபெற்று வரும் தேர்தலில் தேசிய அளவில் முக்கியமாக 2 கூட்டணிகள் தலைமையிலான கூட்டணி இடையே போட்டி இருந்து வருகிறது. 80 தொகுதிகள் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் , இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி 33 இடங்களில் வகிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  மேலும் பாஜக 28 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


இந்தியாவிலே, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் இருந்து வரும் நிலையில், பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள், பாஜக கூட்டணி 70 மேற்பட்ட தொகுதிகளை கைப்பெற்றும் என தெரிவித்திருந்தன. ஆனால், இன்று தொடக்கத்தில் இந்தியா கூட்டணி சரி சமமாக தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஜக நட்சத்திர வேட்பாளராக இருக்கும் , அமேதி தொகுதியில் போட்டியிடும் ஸ்மிருதி ராணி பின்னடைவை சந்தித்துள்ளார் ( 10 மணி நிலவரப்படி ). 


மேலும், வரும் அடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கையில்  யாருக்கு சாதகம் இருக்கும் என்பது குறித்து அடுத்தகட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பொறுத்தே அமையும். எதிர்பாராத திருப்பங்களால் போட்டி சற்று கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Also Read: TN Lok Sabha Election Results 2024 LIVE: தருமபுரியில் 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் சௌமியா அன்புமணி முன்னிலை!


Also Read: Election Results 2024 LIVE: 300 இடங்களை தாண்டிய பாஜக - பெரும்பான்மையை எட்டுமா I.N.D.I.A. கூட்டணி