பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேனி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் கல்லூரியில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.சிவபிரசாத் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்று, வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு வாக்குப்பதிவிற்கு தேவையான இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
DC vs KKR LIVE Score: எடுபடுமா டெல்லியின் கேம் ப்ளான்; டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் செய்ய முடிவு!
தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் தேர்வு செய்யப்பட்டு பொதுப்பணித்துறையின் சார்பில் இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி, பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் வாக்கு எண்ணும் அறையில் தேவையான பாதுகாப்பு வசதிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, சேமிப்பு அறை, பார்வையாளர்கள் அறை, மேலும், பாதுகாப்பு வசதிகள் குறித்தும், கட்டுப்பாட்டு அறை அமைப்பது, கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் இடங்கள் போன்ற பல்வேறு விதமான பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருவதையும் கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Gold Rate: 60 ஆயிரத்தை நோக்கி நகரும் 1 சவரன் தங்கம்; எப்ப விலை குறையும்? சிறப்பு அலசல்
மேலும், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர்கள் வந்து செல்லும் வழிகள், கணினி அறை, குடிநீர் வசதி, மின்இணைப்பு வசதி, கழிவறை, அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு தனித்தனி தடுப்புகள் அமைக்கும் பணிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் இடத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பாதைகள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்து, அறிவுரைகள் வழங்கினார். இவ்வாய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, தனித்துணை ஆட்சியர் முரளி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.