DC vs KKR LIVE Score: 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! டெல்லியை சிதைத்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்குச் சென்ற கொல்கத்தா!

IPL 2024 DC vs KKR LIVE Score Updates: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 03 Apr 2024 11:29 PM
DC vs KKR LIVE Score: 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! டெல்லியை சிதைத்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்குச் சென்ற கொல்கத்தா!

இறுதியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி  17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டும் எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.  கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா மூன்று விக்கெட்கள் கைப்பற்றினர். ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்குச் சென்றுள்ளது. 


 

DC vs KKR LIVE Score: ஸ்டப்ஸ் அவுட்!

ஸ்டப்ஸ் தனது விக்கெட்டினை வருண் சக்ரவர்த்தி பந்தில் போட்டியின் 24வது ஓவரில் 54 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

DC vs KKR LIVE Score: ஸ்டப்ஸ் அரைசதம்!

28 பந்தில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரி விளாசி தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். இவர் விளாசும் முதல் ஐபிஎல் அரைசதம் இது. 

DC vs KKR LIVE Score: 14 ஓவர்கள் முடிந்தது!

14 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs KKR LIVE Score: அக்‌ஷர் பட்டேல் அவுட்!

அக்‌ஷர் பட்டேல் தான் எதிர்கொண்ட முதல் பந்தினை சிக்ஸர் விளாச முயற்சி செய்து விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

DC vs KKR LIVE Score: ரிஷப் பண்ட் அவுட்!

25 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து ரிஷப் பண்ட் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறியுள்ளார். 

DC vs KKR LIVE Score: சிதைக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர்!

ஆட்டத்தின் 12வது ஓவரை வீசிய வெங்கடேஷ் ஐயர் ஓவரில் ரிஷப் பண்ட் 28 ரன்கள் குவித்து மிரட்டினார். 

DC vs KKR LIVE Score: அதிரடியாக அரைசதம் விளாசிய ரிஷப் பண்ட்!

23 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார் ரிஷப் பண்ட். இவர் இதுவரை மூன்று பவுண்டரி 5 சிக்ஸர் விளாசியுள்ளார். 

DC vs KKR LIVE Score: 100 ரன்களைக் கடந்த டெல்லி!

டெல்லி அணி 11.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs KKR LIVE Score: 11 ஒவர்கள் முடிந்தது!

11 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 97 ரன்கள் சேர்த்துள்ளது. 

DC vs KKR LIVE Score: 11 ஓவரில் 190 ரன்கள் தேவை!

டெல்லி அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் சேர்த்துள்ளனர். டெல்லி வெற்றி பெற 11 ஓவரில் 190 ரன்கள் தேவைப்படுகின்றது. 

DC vs KKR LIVE Score: 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்!

ரிஷப் பண்ட் மற்றும் ஸ்டப்ஸ் கூட்டணி 26 பந்தில் 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs KKR LIVE Score: 8 ஓவ்ர்கள் முடிந்தது!

8 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs KKR LIVE Score: பவர்ப்ளே முடிந்தது!

பவர்ப்ளே முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்துள்ளது. 

DC vs KKR LIVE Score: சிக்ஸரோடு தொடங்கிய ரிஷப் பண்ட்!

4வது ஓவரின் கடைசிப் பந்தை எதிர்கொண்ட ரிஷப் பண்ட் அதனை சிக்ஸருக்கு விரட்டினார். இந்த பந்துதான் அவர் எதிர்கொண்ட முதல் பந்து. 4 ஓவர்கள் முடிவில் டெல்லி 4 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகின்றது. 

DC vs KKR LIVE Score: டேவிட் வார்னரை வெளியேற்றிய ஸ்டார்க்

சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 13 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை மிட்ஷெல் ஸ்டார் வீசிய 4வது ஓவரில் இழந்து வெளியேறினார். 

DC vs KKR LIVE Score: அபிஷேக் போரல் டக் அவுட்!

அபிஷேக் போரல் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் வைபவ் ஆரோவ் பந்தில் இழந்து வெளியேறினார். 

DC vs KKR LIVE Score: அடுத்தடுத்து சரியும் விக்கெட்டுகள்; இமாலய இலக்கை எட்டுமா டெல்லி?

டெல்லி அணி மூன்று ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs KKR LIVE Score: தொட்டதெல்லாம் ஹிட்; சல்லி சல்லியாய் நொறுங்கிய டெல்லி பவுலிங்; 272 ரன்கள் குவித்த கொல்கத்தா!

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது.  இது ஐபிஎல் வரலாற்றில் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக அமைந்துள்ளது. 

DC vs KKR LIVE Score: 250 ரன்களைக் கடந்த கொல்கத்தா!

18.2 ஓவரில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs KKR LIVE Score: 200 ரன்களைக் கடந்த கொல்கத்தா!

15.2 ஓவரில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs KKR LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs KKR LIVE Score: ரகுவன்ஷி அவுட் !

சிறப்பாக விளையாடி 27 பந்தில் 54 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

DC vs KKR LIVE Score: ரகுவன்ஷி அரைசதம்!

தனது அறிமுகப் போட்டியில் 25 பந்தில் நான்கு பவுண்டரி மூன்று சிக்ஸர் விளாசி அரைசதம் விளாசியுள்ளார். 

DC vs KKR LIVE Score: சுனில் நரேன் அவுட்!

39 பந்தில் 85 ரன்கள் சேர்த்த நிலையில் சுனில் நரேன் தனது விக்கெட்டினை சுனில் நரேன் இழந்து வெளியேறினார். இவர் 7 பவுண்டரி 7 சிக்ஸர் விளாசியுள்ளார். 

DC vs KKR LIVE Score: 12 ஓவர்கள் முடிந்தது!

12 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 162 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs KKR LIVE Score: 10 ஓவர்கள் முடிந்தது!

10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 135 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது. 

DC vs KKR LIVE Score: 9 ஓவர்கள் முடிந்தது!

9 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 126 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது. 

DC vs KKR LIVE Score: 100 ரன்களைக் கடந்த நரைன்!

7.3 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 104 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs KKR LIVE Score: மின்னல் வேகத்தில் அரைசதம்!

சுனில் நரேன் 21 பந்தில் தனது அரைசதத்தினை விளாசியுள்ளார். இவர் 6 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசினார். 

DC vs KKR LIVE Score: பவர்ப்ளேவில் மிரட்டிய கொல்கத்தா!

கொல்கத்தா அணி பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 88 ரன்கள் சேர்த்துள்ளார். 

DC vs KKR LIVE Score: முதல் விக்கெட்டினை இழந்த கொல்கத்தா!

கொல்கத்தா அணி 4.3 ஓவரில் தனது முதல் விக்கெட்டினை இழந்துள்ளது. பில்ப் சால்ட் 12 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

DC vs KKR LIVE Score: அதிரடி ஐம்பது!

கொல்கத்தா அணி 4 ஓவர்கள் முடிவில் 58 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs KKR LIVE Score: இரண்டு ஓவர்கள் முடிந்தது!

இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 17 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs KKR LIVE Score: முதல் ஓவர் முடிந்தது!

முதல் ஓவர் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs KKR LIVE Score: களமிறங்கிய கொல்கத்தா!

கொல்கத்தா அணியின் இன்னிங்ஸை சுனில் நரேன் மற்றும் பிலிப் சால்ட் தொடங்கியுள்ளனர். 

DC vs KKR LIVE Score: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ப்ளேயிங் லெவன்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரின்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி

DC vs KKR LIVE Score: டெல்லி கேப்பிடல்ஸ் ப்ளேயிங் லெவன்!

டெல்லி கேபிடல்ஸ் பிளேயிங் லெவன்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், ரசிக் தார் சலாம், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது


 

DC vs KKR LIVE Score: எடுபடுமா டெல்லியின் கேம் ப்ளான்; டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் செய்ய முடிவு!

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. 

Background

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இவ்விரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. 


முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அதேசமயம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றிபெற்றுள்ளது. முன்னதாக, முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்ற கொல்கத்தா அணி, அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடும் பிளேயிங் 11, பிட்ச் ரிப்போர்ட் என அனைத்தையும் இங்கு தெரிந்துகொள்வோம்.


பிட்ச் ரிப்போர்ட்: 


விசாகப்பட்டினத்தின் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் குவிப்பர். இந்த ஆடுகளத்தில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை அடிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை கடினமான பிட்சாக இருக்கும். எனவே இரு அணிகளின் பந்துவீச்சாளர்களும் இந்த கடினமான சவாலை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்க்க சவாலாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சில் சிஎஸ்கே அணி துடுப்பெடுத்தாட களமிறங்கிய போது அந்த அணி ஆட்டமிழந்தது, ஆனால் இதன் பின்னரும் ஸ்கோர் 6 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்களை எட்டியது. அதாவது போட்டியில் மொத்தம் 362 ரன்கள் எடுக்கப்பட்டது. இன்றைய போட்டியிலும் இதே போன்ற ஒன்றைக் காணலாம். 


இந்த மைதானத்தில் இதுவரை 14 டி20 போட்டிகள் நடந்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்த அந்த அணி 7 முறை வெற்றி பெற்றுள்ளது.


நேருக்கு நேர்: 


டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 33 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா 16 போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. 


விளையாடிய போட்டிகள்: 33
DC வென்றது: 16
KKR வென்றது: 16
டை: 00
முடிவு இல்லை: 0
கைவிடப்பட்டது: 1


கொல்கத்தாவின் சொந்த மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில், டெல்லி அணி 9 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


டெல்லி கேப்பிட்டல்ஸ்:


ரிஷப் பண்ட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், அபிஷேக் போரல், பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா மற்றும் கலீல் அகமது.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:


பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா மற்றும் ஆங்கிரிஷ் ரகுவன்ஷி.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.