மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான இஷான் கிஷன் மும்பை விமான நிலையத்தில் சூப்பர்மேன் உடை அணிந்து வந்திருந்தார். இஷான் கிஷன் ஏன் இப்படி ஒரு தனித்துவமான உடையை அணிந்தார் என்பதில் சில குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இப்போது, அதற்கான உண்மையான காரணம் தெரிய வந்துள்ளது.
என்ன காரணம்?
மும்பை இந்தியன்ஸ் அணியின் டீம் மீட்டிங்கிற்கு தாமதமாக வந்ததற்காக இஷான் கிஷன் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸின் புதிய முயற்சியின்படி, எந்த வீரரும் டீம் மீட்டிங்கிற்கு தாமதமாக வந்தால், அவர்கள் அடுத்த முறை எந்த நகரத்திற்கு பயணம் செய்தாலும் அவர்கள் சூப்பர்மேன் உடையை அணிய வேண்டும் என தெரிவித்ததால் தான் இஷான் கிஷன் இவ்வாறு வந்துள்ளார்.
கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில் குஜராத் லைன்ஸ் அணிக்காக விளையாடிய இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் அணி 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் எடுத்தது. அன்றிலிருந்து இதுவரை இஷான் கிஷன் மும்பை அணிக்காக விளையாடி வருகின்றார்.
இஷான் கிஷனின் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் 99 ரன்கள், இதனை கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் ஐபிஎல்-இல் மட்டும் 224 பவுண்டரிகள் மற்றும் 108 சிக்ஸர்களை அடித்துள்ளார். இஷான் கிஷன் தனது கடைசி ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் மும்பை, வான்கடே ஸ்டேடியத்தில் விளையாடினார், 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.