நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் தங்களது பகுதிகளில் வாக்குகளை சேகரிக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.  அதிலும் சுயேட்சையாக களம் இறங்கும் நபர்கள் தங்களது பரப்புரைகளை மேற்கொள்ள ஒவ்வொரு இடங்களிலும் வித்தியாசத்தை காண்பித்து வருகின்றனர்.


IPL 2024: தோல்வியில் இருந்து மீளுமா பஞ்சாப் கிங்ஸ்..? வெற்றியை தொடருமா குஜராத் டைட்டன்ஸ்..? இன்று நேருக்குநேர் மோதல்!




அதுபோல தான் தேனி மாவட்டம் பாராளுமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளராக களம் காணும் சர்ச்சில் துரை என்பவர் ஆண்டிப்பட்டியில் தனது சின்னமான தர்பூசணி பழத்தை கையிலே தூக்கிக்கொண்டு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.


தமிழ் கற்றுக்கோங்க மோடி; முதல்வரிடம் சொல்லி நல்ல ஆசிரியரை அனுப்புகிறோம் - கனிமொழி




இவர், அப்பகுதியில் இருந்த கடைகளில் கரும்பு சக்கை பிழிந்து, கரும்புச்சாறு போட்டுக் கொடுத்தும், முறுக்கு கம்பெனிக்குள் நுழைந்து அப்பளம் பொரித்து கொடுத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது அனைவரையும் கவர்ந்தது. மனிதநேய அமைதி கட்சியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சர்ச்சில்துரை தேனி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக தர்பூசணி சின்னத்தில் போட்டியிடுகிறார். ஆண்டிபட்டி அருகே கானாவிலக்கு பகுதியில் தனக்கு தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்பட்டுள்ள சின்னமான தர்பூசணி பழத்தை கையில் தூக்கி கொண்டு நேரடியாக கடைகளிலும், வீடுகளிலும் உள்ள பொதுமக்களிடம் கொடுத்து வாக்கு கேட்டார். 


Leopards Movement: அங்குமிங்கும் நடமாடும் சிறுத்தை.. அதிரடியாக மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!




அப்போது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பிருந்த கரும்புச்சாறு கடை ஒன்றில் கரும்பு சக்கை பிழிந்து சாறு எடுத்து பொதுமக்களுக்கும் உடன் இருந்தவர்களுக்கும் கொடுத்து வாக்கு சேகரித்தார். இதே போல அதன் அருகே உள்ள முறுக்கு கம்பெனி ஒன்றிற்குள் சென்ற அவர் அப்பளம் பொரித்து கொடுத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வித விதமான முறையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வாக்கு சேகரித்தது அனைவரையும் கவர்ந்தது.