கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிஉம் சச்சிதானதத்திற்கு வாக்கு சேகரித்த் நடிகை ரோகிணி,  வாக்காளர்கள் முன்பு தெலுங்கு மற்றும் தமிழில் மாறி மாறி பேசி பிரச்சாரம் மேற்கொண்டார்.




திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி ஆனது நடைபெற்றது. அதனை  தொடர்ந்து பழனியிலும் நடிகை ரோகிணி பரப்புரை மேற்கொண்டார்.


IPL 2024: தோல்வியில் இருந்து மீளுமா பஞ்சாப் கிங்ஸ்..? வெற்றியை தொடருமா குஜராத் டைட்டன்ஸ்..? இன்று நேருக்குநேர் மோதல்!




பழனியில் திரைப்பட நடிகை ரோகிணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி மற்றும் பழனி நகரில் ரோகிணி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சத்யா நகரில் தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் பகுதியில் நடிகை ரோகிணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது தனக்கும் தெலுங்கு தெரியும் எனக் கூறினார். உடனே அங்குள்ள மக்கள் தெலுங்கில் பேசுமாறு ரோகிணியிடம் கேட்டுக்கொண்டனர்.


Leopards Movement: அங்குமிங்கும் நடமாடும் சிறுத்தை.. அதிரடியாக மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!



வாக்காளர்கள் முன்பு தெலுங்கு மற்றும் தமிழில் மாறி மாறி பேசி பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்கள் 80 சதவீதம் கல்வி அறிவு பெற்றுள்ளனர். ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆளக்கூடிய மாநிலங்களில் பெண்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர். கேஸ் விலையை கடுமையாக உயர்த்திவிட்டு தேர்தலுக்காக 100 ரூபாய் குறைத்து நாடகமாடுகின்றனர். பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறுகிறது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தமிழக அரசு பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என ரோகிணி கேட்டுக்கொண்டார்.


தமிழ் கற்றுக்கோங்க மோடி; முதல்வரிடம் சொல்லி நல்ல ஆசிரியரை அனுப்புகிறோம் - கனிமொழி