தமிழ்நாட்டில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வேட்பு மனுக்களை திரும்ப பெறுதல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த சூழலில், உறுதிசெய்யப்பட்ட வேட்பாளர்கள் தங்களின் வார்டுகளில் வெற்றி பெறுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒன்றாக வித்தியாசமான முறைகளில் வாக்காளர்களே அணுகி ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.




Watch Video | இடிக்கிற அம்மியில் இருந்து... இட்லி குண்டா வரை எல்லாமே வெள்ளி மயம்... வாயடைக்க வைத்த காரைக்குடி சீர் வரிசை!


இந்நிலையில் மயிலாடுதுறையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் வெற்றி வியூக ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, இளைஞர் நலன் விளையாட்டுத்துறை துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை கட்சியினர்களுக்கு வழங்கினார். 




Kerala Trekker Rescued: 45 மணிநேர போராட்டம்... பாலக்காடு மலைமுகட்டில் சிக்கியிருந்த இளைஞர் பத்திரமாக மீட்பு!


அப்போது கூட்டத்தில் பேசுய அவர், தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை நகராட்சியில் 30 வார்டுகளில் திமுக கூட்டணியின்  வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 வார்டுகளில் கவனம் செலுத்தி 36 வார்டுகளிலும் வெற்றிபெற வேண்டும், வெற்றி பெறுவதற்கு நாங்கள் துணைநிற்போம் என்றார்.




காவல்துறை தகுதி தேர்வுக்கு எடையை கூட்டி காட்ட 4 பேண்ட்களை போட்டு வந்த பெண் தகுதி நீக்கம்


வாக்காளர்களை சந்திக்கும்போது தமிழக முதல்வரின் சாதனைகளை விளக்கிகூறி வாக்கு சேகரிக்க வேண்டும், கடந்த தேர்தலைவிட தற்போதைய தேர்தலில் விருந்தினர்களை வரவேற்பது போல முகமலர்ச்சியுடன் நமது வேட்பாளர்களை வாக்காளர்கள் வரவேற்கும் நிலமை உள்ளது. கடந்த பல தேர்தல்களில் வேட்பாளர்கள் தான் வாக்காளர்களை பார்த்து ஓட்டு கேட்கும் சூழல் நிலவியது.  ஆனால், இன்று வாக்காளர்களே தமிழகத்தின் நலனை கருதி தமிழக முதல்வரின் அயராத பணியை பார்த்து, தமிழக உரிமைகளை பாதுகாக்கின்ற பாங்கினை பார்த்தும், சமூக நீதியை போற்றி பாதுகாக்கின்ற தமிழக முதல்வரின் பெருமைகளை உணர்ந்துள்ள தமிழக வாக்காளர்கள் உங்களுக்காக அவர்களும் உதயசூரியன் மற்றும் கூட்டணி சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வருகின்றனர். ஆகவே வேட்பாளர்கள் தாங்கள் வாக்காளர்கள் அனைவரையும் சந்தித்து வாக்குகள் சேகரித்து முழு வெற்றியடைய வேண்டும் என்று  கூறினார்.