செட்டிநாடு என்றாலே நம்  நினைவுக்கு வருவது  அரண்மனை போன்ற வீடுகள் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய செட்டிநாட்டு கைதறி கண்டாங்கி சேலைகள் , சாப்பாடு. ஆனால் அந்த வரிசையில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்... திருமணத்திற்கு  சீர்வரிசை வைப்பதிலும்  புகழ் பெற்ற ஊர் செட்டிநாடு பகுதி .




மணப்பெண்ணுக்கு அடுக்கடுக்காக சில்வர் பாத்திர  சீர்வரிசை பொருட்களை கொடுத்தாலும் வெள்ளி பொருள்கள் தான் திருமணத்திற்கு அழகு சேர்க்கும் என்பார்கள்.பெண்கள் குழந்தைகளை அதிகம் நேசிக்கும் பெற்றோர்  மகள்களின் திருமணத்தை தடபுடலாக செட்டிநாடு விருந்துடன்  ஊர் மக்கள், கிராமத்தார்கள்,உறவினர்கள் ஆகியோர் பொறாமை படும்  அளவிற்கு சீர்வரிசை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைப்பார்கள்.  இந்நிலையில் காரைக்குடி திருமணம் ஒன்றில் மகளின்  திருமண சீர்வரிசையில் வெள்ளிஅம்மிக்கல், ஆட்டுக்கல், நெல் குத்துக்கல், இட்லி சட்டி, குடங்கள், சங்கு, தாம்பூலம், பல்லாங்குழி,பாத்திரங்கள், குத்துவிளக்கு என அனைத்தும் வெள்ளிப் பொருட்கள் ஆகவே இருக்க வேண்டும் என எண்ணி பல லட்சம் மதிப்பில் வெள்ளி பொருட்களான சீர்வரிசை செய்து அசத்தியுள்ளனர் பெற்றோர்.


தற்போது இந்த வெள்ளிப் பொருட்களான சீர் வரிசை வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. பொதுவாக வெள்ளி பொருட்கள் என்றால், குறிப்பிட்ட சில பொருட்களை வழங்குவார்கள். ஆனால், ஒட்டுமொத்த சீர் வரிசை பொருளும் வெள்ளியில் இருந்தால் எப்படி இருக்கும்? இப்படி தான் இருக்கும்! திருமணம் நடைபெறும் மண்டபத்தில் வரிசைப்படுத்தப்பட்ட சீர் வரிசை பொருட்களை அடுக்கி வைத்து, வாழ்த்த வந்தவர்கள் எல்லாம் வாயடைத்து நின்றது தான் அங்கு ஹைலைட்.






மங்கள இசையின் பின்னணியில், அடுக்கி வைத்திருந்த வெள்ளி பாத்திரங்கள், வெள்ளி சாமான்களை பார்க்கவே ரம்யமாக இருந்ததாக கூறுகிறார்கள் திருமணத்திற்கு வந்தவர்கள். வெள்ளி பாத்திரங்கள் மட்டுமல்லாமல், மணமகனுக்கு தேவையான ஆடைகள், சூட்கேஸ், பேக்குகள் என அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எல்லாம், லட்சங்களை விழுங்கியிருக்கும் என்பதில் மாற்றுக்  கருத்தில்லை. ஆனால், அதையெல்லாம் கடந்து, தன் மகளின் மகிழ்ச்சி தான் முக்கியம் என பெற்றோர் ஏற்பாடு செய்த இந்த ஏற்பாடு, உண்மையில் அன்று அவருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண