தமிழகத்தில் காலியாக உள்ள 510 உள்ளாட்சி பதவிகள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆயிரத்து 22 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 19 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் கூத்தியாயாம் பேட்டை ஊராட்சியில்  16 வார்டு கொள்ளிடம் ஒன்றிய கவுன்சிலர் உயிரிழந்ததை அடுத்து அந்தப் பதவி காலியாக இருந்து வந்தது.




IND vs ENG, 2nd T20 : தொடரை வெல்லுமா இந்தியா...? வெற்றியை பறிக்குமா இங்கிலாந்து..?


அதனைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மஞ்சு என்பவருக்கு கட்சி மேலிடத்திலிருந்து உரிய கடிதம் கிடைக்காததால் சுயேச்சை சின்னமாக கைபை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாஜக வேட்பாளராக போட்டியிடும் சித்தாராபுஷ்பராஜ் என்பவருக்கும் குலையுடன்கூடிய தென்னைமரம் சுயேச்சை சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் 16வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினருக்கு கூத்தியம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா மணிமாறன் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். 




Crime: காரைக்காலில் 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - பெயிண்டருக்கு 22 ஆண்டுகள் சிறை..!


இந்த சூழலில் கூத்தியாம்பேட்டை ஊராட்சியில் சரஸ்வதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர் கண் பார்வை தெரியாத மூதாட்டி ஒருவருக்கு வாக்களிக்க உதவி செய்துள்ளார். இதனைக் கண்ட அதிமுக கட்சியினர், பூத் ஏஜெண்டுகள் மட்டுமே வேட்பாளர்களுக்கு வாக்களிக்க உதவி செய்ய வேண்டும் என்றும், நீங்கள் எவ்வாறு உதவி செய்தீர்கள்? என கேள்வி எழுப்பி, மூதாட்டியின் வாக்கை மாற்றி நீங்கள் உங்களுக்கு ஆதரவாளர்களுக்கு பதிவு செய்தீர்கள் எனக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




Vendhu Thanindhadhu Kaadu: சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ தியேட்டர் ரைட்ஸ்.. கைப்பற்றிய உதயநிதி.. எகிறும் எதிர்பார்ப்பு..!


அதனைத் தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலரிடம், இதற்கு மேல் இவ்வாறு நடைபெற கூடாது என எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.  சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு தாமதமான நிலையில், மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண