இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது. இதையடுத்து, இரு அணிகளும் மோதிய டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று பர்மிங்காமில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் விராட்கோலி மீண்டும் களமிறங்க உள்ளார். மற்றபடி அணியின் ஆடும் லெவனில் பெரியளவில் மாற்றம் இருக்காது. கடந்த போட்டியில் தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் யாரை வெளியில் உட்காரவைப்பது என்ற கேள்வி எழும்.




இருப்பினும், வரும் உலககோப்பையை கருத்தில் கொண்டு விராட்கோலி மீண்டும் பார்முக்கு திரும்ப அவர் சில போட்டிகளில் கட்டாயம் ஆட வேண்டியது அவசியம். இந்திய அணி கடந்த போட்டியில் பெற்ற வெற்றி மூலம் மிகுந்த உற்சாகத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்கும்.


இந்திய அணிக்கு கேப்டன் ரோகித்தும், இஷான்கிஷானும் அற்புதமான தொடக்கத்தை அளிப்பது அவசியம்  ஆகும். விராட்கோலி மீண்டும் தனது பார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தீபக்ஹூடா, சூர்யகுமார் யாதவ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பலாம்.


கடந்த போட்டியில் மிகவும் சிறப்பாக ஆடிய ஹர்திக்பாண்ட்யா இந்த போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். தினேஷ்கார்த்திக் பினிஷர் பிளேசில் சிறப்பாக ஆடுவார் என்று நம்பலாம். பந்துவீச்சாளர்களான ஹர்ஷல், புவனேஷ்குமார், அர்ஷ்தீப்சிங்கும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினால் இந்தியா வசம் வெற்றியாகும்.




கடந்த போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி வெற்றி பெறத்துடிக்கும். அந்த அணியின் கேப்டன் பட்லர் அதிரடி காட்ட வேண்டியது அவசியம். தொடர்ந்து சொதப்பும் ராய் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டும். ஐ.பி.எல்.லில் கலக்கிய லிவிங்ஸ்டனின் அதிரடி இங்கிலாந்து ஸ்கோர் ஏறுவதற்கு கைகொடுக்கும். ஆல்ரவுண்டர் மொயின் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பந்துவீச்சாளர்களான கிறிஸ் ஜோர்டன், சாம்கரண், மில்ஸ் ஆகியோரும் சிறப்பாக ஆடினால் மட்டுமே அந்த அணி வெற்றி பெற முடியும்.


இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி இங்கிலாந்தின் சொந்த மண்ணிலே டி20 தொடரை வென்று அசத்தும். அதேசமயத்தில் தொடரை இழக்கக்கூடாது என்று இங்கிலாந்தும் முழுவீச்சில் ஆடுவார்கள் என்பதால் இந்த போட்டிக்கு பஞ்சமிருக்காது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.




இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ், சோனி சிக்ஸ், சோனி சிக்ஸ் எச்.டி. ஆகிய தொலைக்காட்சிகளில் கண்டுகளிக்கலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண