வீட்டில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி காரைக்கால் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதிக்குட்பட்ட கீழ பொன்பேத்தி, சேவகன் பேட்டை சேர்ந்தவர் ஜெயராமன்(50). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். கடந்த 22.12.2020 அன்று அதே பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை ஜெயராமன் பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பான புகார் நெடுங்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், காரைக்கால் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி அல்லி பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அதன்படி, குற்றவாளியான பெயிண்டர் ஜெயராமனுக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் சிறுமியையும் சிறுமியின் பெற்றோரையும் கொலை மிரட்டல் விடுத்ததற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மொத்தம் 22 ஆண்டுகள் விதிக்கப்பட்டது. ஆயிரம் ரூபாய் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒர் ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது காரைக்கால் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்