விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் ஒருவர் பாஜகவில் இருந்து திமுகவுக்கு தாவிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவி பொது பிரிவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ள நிலையில் கடந்த 5 ஆம் தேதி வெளியான வாக்காளர் பட்டியல் படி மொத்தம் 23,939 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11,497 ஆண்கள், 12,422 பெண்கள், 20 திருநங்கைகள். செஞ்சி பேரூராட்சியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். வாக்காளர்கள் அதிகம் என்பதால் 18 வார்டுகளுக்கு 32 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Urban Local Body Election | வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே பரப்புரையை தொடங்கிய அமைச்சரின் மகன்
செஞ்சி பேரூராட்சியை பொறுத்தவரை கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடந்த 5 தேர்தலிலும் தி.மு.க., சார்பில் தற்போது அமைச்சராக உள்ள செஞ்சி மஸ்தான் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2011 தேர்தலின் போது 9 வார்டுகளில் தி.மு.கவும், 7 வார்டுகளில் அ.தி.மு.கவும், 2 வார்டுகளில் தே.மு.தி.க.,வும் வெற்றி பெற்றிருந்தனர். இந்த நிலையில் சிறப்பு நிலை பேரூராட்சியான செஞ்சியில் திமுக, அதிமுக, பாஜக, சுயேட்சை வேட்பாளர்கள் நேற்று 100 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் பாஜக சார்பில் 2ஆவது வார்டில் துரை என்பவர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் பாஜக வேட்பாளர் துறை அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
பாஜக வேட்பாளராக துரை வேட்புமனுத்தாக்கல் செய்ததில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தானின் ஆதரவாளர்கள் துரையுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை திமுகதான் கைப்பற்றும் என்றும் இந்த நிலையில் ஜெயிக்கும் இடத்தில் இருந்தால் பலன் அதிகம் திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இருக்கின்ற இடத்திலேயே இருக்கின்ற கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் தைரியம் இந்தியாவிலேயே என் ஒருவனுக்கு தான் இருக்கிறது! இதனால் நான் கோழை என்றோ.. பச்சோந்தி என்றோ.. யாரும் என்ன வேண்டாம் ! என்கிற வடிவேல் வசனத்தை வைத்து வலைதளங்களில் நெடிசங்கள் கலாட்டா ஆரம்பமாகி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்