விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவி பொது பிரிவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ள நிலையில் கடந்த 5 ஆம் தேதி வெளியான வாக்காளர் பட்டியல் படி மொத்தம் 23,939 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11,497 ஆண்கள், 12,422 பெண்கள், 20 திருநங்கைகள். செஞ்சி பேரூராட்சியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். வாக்காளர்கள் அதிகம் என்பதால் 18 வார்டுகளுக்கு 32 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

 




 


 

செஞ்சி பேரூராட்சியை பொறுத்தவரை கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடந்த 5 தேர்தலிலும் தி.மு.க., சார்பில் தற்போது அமைச்சராக உள்ள செஞ்சி மஸ்தான் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2011 தேர்தலின் போது 9 வார்டுகளில் தி.மு.க‌வும், 7 வார்டுகளில் அ.தி.மு.கவும், 2 வார்டுகளில் தே.மு.தி.க.,வும் வெற்றி பெற்றிருந்தனர். இந்த நிலையில் தற்போது திமுக சார்பில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் 17 ஆம் தேதி செஞ்சி பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்பட்டு நேர்காணல் நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியார் மற்றும் மனைவி சைதானி பி நேர்காணலில் கலந்து கொண்டனர்.

 


செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார்


 

மேலும் செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவி பொது என தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அமைச்சர் கேஸ் மஸ்தான் மகன் மொக்தியார் அவர்கள் தேர்தல் காலத்தில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வேட்புமனு தாக்கல் முன்பாகவே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.