தமிழகம் முழுவதும் வருகிற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியன்று  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து பிரதான காட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 



 

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளை மேயர் பதவியை குறி வைத்து கட்சியில் செல்வாக்கு மிக்கவர்களின் மனைவி, மகள் உள்ளிட்ட பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் முதன் முறையாக களம் காணும் பெண் வேட்பாளர்கள் போட்டா போட்டிக் கொண்டு தங்களது வார்டு வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு யுக்திகளை கையில் எடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



 

அந்த வகையில்  காஞ்சிபுரம் மாநகராட்சி 18 ஆவது வார்டுக்கு உட்பட்ட சி.எஸ்.ஐ. ஆஸ்பிட்டல் ரோடு மற்றும் பேருந்து நிலையம் பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் மல்லிகா ராமகிருஷ்ணன், இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது  சலவைக் கடை ஒன்றிற்கு சென்று இஸ்திரிப்பெட்டியை கொண்டு துணியை அயன் செய்து கொடுத்து, சலவைத் தொழிலாளியிடம் தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரத்தினை கொடுத்து வாக்கு சேகரித்தர்.



 


 

அதன்பின் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள டீ கடைக்கு சென்று பொது மக்களுக்கு  டீ போட்டுக் கொடுத்தும், உணவகம் ஒன்றில்  ஆம்ப்லெட் போட்டுக்கொடுத்து  வாக்காளர்களிடையே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்யுமாறும், திமுகவின் சாதனை மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறி நோட்டீஸ் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.