திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளுக்கு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வந்தவாசி நகராட்சியில் மொத்தம் உள்ள 27 போட்டியிடுவதற்காக 153 வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். வந்தவாசி நகராட்சிக்கு உட்பட 18ஆவது வார்டு பகுதியில் போட்டியிட திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் ஜெகனின் தாயார் கோட்டீஸ்வரி சீட் கேட்ட நிலையில் கோஷ்டி பூசலால் வேலாயுதம் என்பவரின் மனைவி தனலட்சுமி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த ஜெகன் தனது தாய் கோடீஸ்வரி சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார். அன்றைய தினமே காங்கிரஸ் கட்சி சார்பில் வேலாயுதம் மனைவி தனலட்சுமி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனால் திமுக மாவட்ட பொறுப்பாளர் தாரணி வேந்தன் மற்றும் வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து 18வது வார்டில் மனுத் தாக்கல் செய்த வேலாயுதம் மனைவி தனலட்சுமி 22ஆவது வார்டுக்கு மாற்றப்பட்டார். அதேநேரம் ஏற்கனவே அங்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட மகேந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் மகேந்திரனை வாபஸ் பெறுமாறு திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் கடைசி வரை அவர் மனுவை வாபஸ் பெறாததால் சுயேச்சை வேட்பாளராக தேர்தல் அதிகாரி அறிவித்து அவருக்கு பீரோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் 9 ஆவது வார்டில் போட்டியிட திமுக சார்பில் நகரச் செயலாளர் ஜலால் மனு தாக்கல் செய்தார். ஆனால் அங்கு அவருக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்பதால் 10ஆவது வார்டுக்கு மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு திமுக சார்பில் போட்டியிட சௌகத் அலி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் அவரை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் கடைசி வரையில் அவர் வாபஸ் பெறாததால் சுயேட்சையாக அறிவிக்கபட்டு குழாய் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்கிடையே 9ஆவது வார்டு திமுக சார்பில் நாகூர் மீரான் என்பது போட்டியிடுகிறார். தற்போது திமுக கட்சியின் மூலம் வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்ட இரண்டு நபர்களையும் திமுக கட்சியினர் நிராகரித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து 22வது வார்டு நேற்று திடீரென காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக சார்பில் மனு தாக்கல் செய்திருந்த மகேந்திரனை வாபஸ் பெறும்படி திமுக தரப்பிலிருந்து மகேந்திரனுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் மற்றும் அவரது மனைவி வந்தவாசி எம்எல்ஏ அலுவலகத்தில் அம்பேத்குமார் முன்னிலையில் அவரது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அப்போது அம்பேத்குமார் மகேந்திரனிடம் நீ வாபஸ் பெற்றுக்கொள் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மகேந்திரன் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், மகேந்திரனின் மனைவி திடீரென அங்கு சென்ற நான்கு சக்கர வாகன சக்கரத்தின் அடியில் படுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதற்கு காரணம் வந்தவாசி எம்எல்ஏ அம்பேத் குமார் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன் என்றும் அங்கு கூறியதாக சொல்லப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடனேயே அதிகாரிகள் வந்தவாசி தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை மூடி சீல் வைத்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு சீல் வைக்கப்பட ஆகாததால் திமுக வார்டு ஒதுக்கீடு பணிகள் அங்கு நடந்து வந்துள்ளது இதை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை இந்நிலையில் எம்எல்ஏ அலுவலகத்தில் உட்கட்சி பூசல் வெடித்ததால் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடந்த பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து எம்எல்ஏ அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுபோன்ற திமுக பிரமுகர் ஆல் ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.