தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறுவதை அடுத்து, அதிமுக திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்கள் இறுதி நாளான இன்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. அதுமட்டுமின்றி தேர்தல் தொடர்பான பணிகளிலும் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்
இந்தச் சூழலில் தேர்தல் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அந்த வகையில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. கட்டுப்பாட்டிற்கு ஏற்றால்போல், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், காவல்துறையினரும், வேட்பாளர்களுடன் வரும் மற்ற நபர்களை தடுத்து நிறுத்தி வேட்பாளரை மட்டும் அனுமதித்து வருகின்றனர்.
Keerthi Suresh | நாயை கொடுமைப்படுத்தினாரா கீர்த்தி சுரேஷ்? சர்ச்சையை கிளப்பும் இன்ஸ்டா போட்டோ!
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்ய திரண்ட திமுகவினர் தேர்தல் கட்டுப்பாடுகளை மீறி வேட்பாளருடன் பலர் சென்று வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். சீர்காழி நகராட்சியில் உள்ள மொத்தம் 24 வார்டுகளில் வேட்பாளர்கள் தனித்தனியாக வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் திமுகவை சேர்ந்தவர்கள் மட்டும் விதிமுறைகளை மீறி ஒவ்வொரு முறையும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் அலுவலகத்தின் உள்ளே சென்று வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
ஆளுங்கட்சியினர் என்பதால் அதிகாரிகளும் காவல்துறையினரும் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் திமுகவினரை மட்டும் ஆளும் கட்சியினருக்கு சாதகமாக தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்படுவதாக மாற்று கட்சியினர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் 4 எம்.எல்.ஏக்களுக்கு கட்சி தலைவரா? - ஜெய்பீம் சந்துரு கேள்வி
மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஆளும் கட்சியினருக்கு பல தலைவர்களை அளிக்கும் அதிகாரிகள் வாக்குப்பதிவின் போது திமுகவிற்கு சாதகமாக செயல்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், இதனை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு சீர்காழி நகராட்சியில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை சீர்காழி நகராட்சியில் திமுக, அதிமுக, பாமக, செய்திகள் என 120 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.