தமிழக ஆளுநர் 4 எம்.எல்.ஏக்களுக்கு கட்சி தலைவரா? - ஜெய்பீம் சந்துரு கேள்வி

நீட்தேர்வு விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதற்கு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். 

Continues below advertisement

நீட்தேர்வு விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதற்கு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், “ த. நா. ஆளுநர் 4 எம்.எல்.ஏக்களுக்கு கட்சி தலைவரா? 234 உறுப்பினர்கள் கொண்ட அவையை அவமதிப்பவரா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  

Continues below advertisement

 

தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சியை தடை செய்யும் வகையில், நீட் தேர்வு இருப்பதாக தமிழக அரசு தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. ஆட்சிக்கு வரும் முன்னரே, நீட் தேர்வு எதிர்ப்பை முன்வைத்து பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின் ஜூன் 17 ஆம் தேதி பிரதமரைம் சந்தித்து நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

இது மட்டுமன்றி, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா செப்டம்பர் 13 சட்ட மன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாபதி ஒப்புதலுக்காக முதலில் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. நீண்ட நாட்களாக ஆளுநர் மாளிகையிலேயே இருந்த நீட்விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

அமளியில் ஈடுபட்ட எம்.பிக்கள் 

இன்று மக்களவையிலும் சபாநாயகர் வெங்கையா நாயுடுவை, இது குறித்து விவாவதிக்க தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தினர். ஆனால் அவர்களது கோரிக்கையை அவர் நிராகரித்து விட்டார். இதனையடுத்து எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் 

பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், "ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?" என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன்.#StandForStateRights pic.twitter.com/ObhQ9UG8IX

— M.K.Stalin (@mkstalin) February 3, 2022

Continues below advertisement