Lok Sabha 204 Results: கர்நாடக பாலியல் புகார் வழக்கில் சிக்கியுள்ள ஜே.டி.எஸ் கட்சியைச் சேர்ந்த பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா, அவர் போட்டியிடும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹசன் தொகுதியில்  பின்னடைவை சந்தித்துள்ளார். 


கர்நாடக பாலியல் புகார் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, விசாரணைக்காக சிறைக்காவலில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா, தற்போது 3.40 மணி அளவில் 43,738 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார். 


பின்னடைவு:


மக்களவைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணி முதல் தொடங்கி எண்ணப்பட்டு வரும் நிலையில், முற்பகலில் பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து  பிற்பகலில், அவர் பின்னடைவை சந்தித்து வருகிறார். தற்போது அவர் 6,26,536  பெற்றுள்ளார். ஆனால், அவரை விட 43,738 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ். எம்.பட்டேல் 6,70,274 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.




கைதான பிரஜ்வல் ரேவண்ணா:


கர்நாடக பாலியல் புகார் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவர் வெளிநாட்டுக்கு சென்றார்.


ரேவண்ணா, அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்,  வரும் மே 31 ஆம் தேதி தாயகம் திரும்பி வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) முன் ஆஜராவேன் என்று அறிவித்தார்.  இந்நிலையில் நள்ளிரவில் நாடு திரும்பிய ரேவண்னாவை,  விமான நிலையத்திலேயே காத்திருந்த சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்தனர்.


இதையடுத்து, கடந்த 31 ஆம் தேதி நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா ஆஜர்படுத்தப்பட்டார்.


நீதிமன்றத்தில்,  குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லையென பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.  மேலும், தன்மீது திட்டமிட்டு புகார் பரப்பப்படுவதாகவும், புகார் அளித்த பெண்ணின் அடையாளங்கள், வீடியோவில் இல்லை எனவும் வாதம் வைக்கப்பட்டது.


இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா சிறைக்காவலில் உள்ள நிலையில், மக்களவைத் தொகுதி வேட்பாளராகவும் உள்ளதால், அவர் போட்டியிடும் தொகுதி பெரிதும் கவனம் பெற்றுள்ளது. 


Also Read: Election Results 2024 LIVE: ரேபரேலி தொகுதியில் வெற்றிபெற்றார் ராகுல் காந்தி..!