தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், மற்ற மாவட்டங்களில் காலியாகவுள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலும் நடத்தப்படுகிறது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரகத்தில் காலியாகவுள்ள 52 பதவிகளுக்கான

  நடைபெற்றது. இதில், உறுப்பினர்கள் இறப்புக் காரணமாக 49 பதவிகளுக்கும், பதவி விலகலால் ஒரு பதவிக்கும், கடந்த முறை தேர்தலின் போது வேட்பு மனு தாக்கல் செய்யப்படாதன் காரணமாக காலியாக இருக்கும் 2 பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில், மாவட்ட ஊராட்சிக் குழுவில் 16-ஆவது வார்டு (அம்மாபேட்டை பகுதி), கும்பகோணம் ஒன்றியத்தில் 24-ஆவது வார்டு, ஒரத்தநாடு ஒன்றியத்தில் 1-ஆவது வார்டு ஆகியவற்றில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  இதேபோல, பட்டுக்கோட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட த. மரவக்காடு, சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பள்ளத்தூர், திருவையாறு ஒன்றியம் வளப்பக்குடி, வெங்கடசமுத்திரம், திருவிடைமருதூர் ஒன்றியம் விளங்குடி, திருவோணம் ஒன்றியம் அதம்பை ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.




மேலும், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளில் பட்டுக்கோட்டை, பூதலூர், பாபநாசம், திருவையாறு ஆகிய ஒன்றியங்களில் தலா ஒரு பதவிக்கும், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 2 பதவிகளுக்கும்,  மதுக்கூர் ஒன்றியத்தில் 3 பதவிகளுக்கும், அம்மாபேட்டை, கும்பகோணம் ஒன்றியங்களில் தலா 4 பதவிகளுக்கும், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், தஞ்சாவூர், ஒரத்தநாடு ஒன்றியங்களில் தலா 5 பதவிகளுக்கும், திருவிடைமருதூர் ஒன்றியத்தில் 6 பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 


இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 12ஆம் தேதி என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி,  மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பாபநாசம் தாலுக்கா, அம்மாப்பேட்டை ஒன்றியம், அன்னப்பன்பேட்டை, திருக்கரூகாவூர், சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு பதிவு நடைபெற்றது. இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, கும்பகோணம், திருவிடைமருதுார், பாபநாசம், அம்மாப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருவோணம், பேராவூரணி, சேதுபாவசத்திரம் ஆகிய பகுதிகளில் வாக்கு பதிவு நடைபெற்றது.  இதில் மொத்த வாக்காளர்கள் 32,620 ஆண், 33,564 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் 3  என மொத்தம் 66,187 பேர்  வாக்களிக்கின்றனர்.




முன்னதாக வாக்காளர்கள், வாக்கு சாவடிக்கு நுழைந்தவுடன், மாஸ்க் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது, தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.  பின்னர், கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்யப்பட்டு, கைகளுக்கு உறை வழங்கப்பட்டது. பின்னர் வாக்காளர்கள்,சமூக இடைவெளியிடன் சென்று வாக்களித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் வாக்கு பதிவு பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், தேர்தல் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏற்பாடமலிருக்கும் வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு பதிவில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க, தேர்தல் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.