திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளில் மொத்தம் 486 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. இதில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 237 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு காலை 10 மணிக்கே சில வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரத் தொடங்கினர். வேட்பாளர்கள், முன்மொழிபவர்களை தவிர மற்றவர்களை மாநகராட்சி அலுவலகத்துக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருடன், வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சியும் அவ்வப்போது நடைபெற்றது. இதையடுத்து காவல் அதிகாரிகள் தேர்தல் விதிகளை விளக்கி கூறி சமரசம் செய்தனர். இதனால் மாநகராட்சி அலுவலக வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.
இதற்கிடையே மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவசுப்பிரமணியன் வேட்புமனுக்கள் பெறும் பணியை ஆய்வு செய்தார். நேற்று காலை முதல் மாலை வரை வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் காரணமாக மாநகராட்சியில் நேற்று ஒரே நாளில் 132 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல் 3 நகராட்சிகளில் 152 பேரும், 23 பேரூராட்சிகளில் 651 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மொத்தம் 935 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தேனியில் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 3 அரசு அதிகாரிகள் கைது
மேலும் இதுவரை திண்டுக்கல் மாநகராட்சியில் 185 பேரும், 3 நகராட்சிகளில் 201 பேரும், 23 பேரூராட்சிகளில் 786 பேரும் என மொத்தம் 1,172 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் அதிகளவில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
பழனி முருகன் கோயிலில் குறவர் இன மக்கள் மலைப்பொருட்களை சீதனமாக கொண்டு வந்து சாமி தரிசனம்