கடந்த ஜனவரி 4 ஆம் தேதி  ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார்.  


இடைத்தேர்தல்:


இதனால் அந்த தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது. அக்கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். 


இதேபோல் அதிமுக சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியிடுகிறார். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக கட்சி சார்பாக ஆனந்த் ஆகியோரும் களம் காண்கின்றனர். இதற்கிடையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.


கனிமொழி:




காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  தைரியம் இருக்கிறதா என பிரச்சாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார். அதற்கு பதவிக்காக யாருடைய காலையும் பிடிக்காதவர் மு.க.ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி கனிமொழி பதிலளித்தார்.


பாஜக-வை எதிர்த்து வரும் முதல் குரல் மு.க.ஸ்டாலினுடையது, பதவிக்காக யாருடைய காலையும் பிடிக்காதவர், யாரைக் கண்டும் எதைக்கண்டும் மிரண்டு போகாதவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கனிமொழி தெரிவித்தார்.


மேலும், இரட்டை இலை தாமரை இலையாக மாறிவிட்டது. தாமரை இலை, அதானி என்ற கோடீஸ்வரரை தாங்கி பிடிக்கும் நிலையை பெற்றுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகுதான், முதுகெலும்பை நிமர்த்தி பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி என கனிமொழி தெரிவித்தார்.


எடப்பாடி பழனிசாமி:




இந்நிலையில், அதிமுக உறுப்பினர் தென்னரசுவை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 85 சதவீதம் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது பச்சை பொய் என தெரிவித்தார்.


பிரச்சாரத்தில் விதவிதமாக மக்களை கவரும் நடவடிக்கையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சியினர், தொண்டர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.


Also Read: KP Munusamy Audio: அதிமுக சீட் ரூ.1 கோடி: கே.பி.முனுசாமி கேட்டதாக, ஓபிஸ் தரப்பு ஆடியோ வெளியீடு..