வாழ்வில் முன்னேற ஆசைப்படுபவர்களுக்கும் உழைக்கத் துடிப்பவர்களுக்கும் எப்போதும் வானம்தான் எல்லையாக இருக்கிறது. படித்து வெற்றியை ருசிக்க ஆசைப்படும் மாணவர்களுக்கும் அப்படித்தான்.


10, 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் உயர் கல்விக்கு ABP நாடு தொடர்ந்து வழிகாட்டி வருகிறது. வானமே எல்லை என்ற தொடரின்கீழ் இந்த வழிகாட்டல் வழங்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில், துணை மருத்துவப் படிப்புகளுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது? அதில் எப்படி படிப்பைத் தேர்வு செய்யலாம்? கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி? படிக்கும்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும், வேலைவாய்ப்பு எப்படி? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.


மருத்துவம் படிக்க முடியாதவர்களுக்கான மாற்றுப்  படிப்பா துணை மருத்துவப் படிப்புகள்? இதற்கென மாணவர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதா?


ஒரு மருத்துவருக்கு மருத்துவமனையில் என்ன வாய்ப்பு இருக்கிறதோ, அதே அளவு துணை மருத்துவம் முடித்த மருத்துவ உதவியாளருக்கும் இருக்கிறது. அதனால், மருத்துவப் படிப்புகளுக்கான மாற்று துணை மருத்துவப் படிப்புகள் அல்ல. மருத்துவப் படிப்புகளுக்கு இணையானவை துணை மருத்துவப் படிப்புகள்.


இதையும் வாசிக்கலாம்: Vaaname Ellai: வானமே எல்லை: பொறியியல் படிப்பில் கணினி அறிவியல் வேஸ்ட்; ஏஐ பெஸ்ட்டா?- வழிகாட்டல்


இதில் மாணவர் சேர்க்கை எப்படி நடத்தப்படுகிறது?


இதில் சேர நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் இருந்து கட்- ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்து மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.


24 துணை மருத்துவப் படிப்புகளில், 4 படிப்புகள் தவிர்த்து மீதமுள்ளவற்றுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் படித்திருக்க வேண்டும். பி.பார்ம், ஆப்டோமெட்ரி, பிஏஎஸ்எல்பி ஆகிய படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் படித்திருந்தால் போதும்.  


வேலைவாய்ப்பு எப்படி உள்ளது?


துணை மருத்துவப் படிப்புகளில் ரேடியேஷன், இமேஜிங் டெக்னாலஜி படிப்புக்கு வெளிநாடுகளில் லட்சத்தில் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. மில்லியன் டாலர்களின் சம்பளம் பெறுவதையும் காண முடிகிறது.


வீடியோ பேட்டியைக் காண



வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது?


கல்லூரிகளில் எப்படி சேரவேண்டும்?


இன்னும் பல கேள்விகளுக்கு மேலே உள்ள வீடியோவில் விடை காணலாம். 


இதையும் வாசிக்கலாம்: Vaaname Ellai: வானமே எல்லை: டிப்ளமோ படித்தும் லட்சங்களில் சம்பாதிக்கலாம்- எப்படி?