2020 டிசம்பர் மற்றும் 2021 ஜூலை கட்டங்களுக்கான தேசிய தகுதி சோதனை ஒரே கட்டங்களாக நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
கணினி அடிப்படையிலான (UGC)-NET பொதுத் தகுதித் தேர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்களை https://ugcnet.nta.nic.in, www.nta.ac.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
2021, ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி நள்ளிரவு 11.50 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (தேர்வு அறிவிப்பில்) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
தேர்வு தேதி: அக்டோபர் 6 முதல் 12 வரை ஆகிய 7 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு ஷிஃப்டுகளில் - காலை 09:00 முதல் 12:00 மணி வரை, பிற்பகல் 3 முதல் 6 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், ugcnet.nta.nic.in, https://nta.ac.in/ இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
(இத்தேர்வுக்கான மின்னணு அனுமதிச் சீட்டினை, தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பற்றிய தகவல், விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள், 011 40759000 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
தேசிய தகுதித் தேர்வு:
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு சுழற்சியை ஒழுங்குபடுத்தும் வகையில், 2021 ஜூலை மாதத் தேர்வுடன், 2020 டிசம்பர் மாதத் தேர்வை சேர்த்து நடத்த திட்டமிட்டுள்ளது.
தேசியத் தகுதித் தேர்வு (National Eligibility Test) அல்லது யுஜிசி நெட் அல்லது என்டிஏ-யுஜிசி-நெட் என்றும் அழைக்கப்படும் இத்தேர்வு இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் / அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதியைத் தீர்மானிப்பதற்கான தேர்வாகும்.மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் நடத்தப்பட்டு வந்த தேசிய தகுதித் தேர்வை, 2018 திசம்பர் முதல் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. தற்போது, இத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் திசம்பர் மாதங்களில் இணையவழி நடத்தப்படுகிறது.
மேலும், வாசிக்க:
CDS Exam 2021: UPSC CDS தேர்வு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு : 339 காலி பணியிடங்களுக்கு வாய்ப்பு