மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும்  ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (I), 2021க்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.  


இதற்கான விண்ணப்பங்களை http://upsconline.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். 2021, ஆகஸ்ட் 24ம் தேதி வரை மாலை 6 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைத் திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி  31.08.2021 முதல் 06.09.2021 ஆகும். 


காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ஆட்சேர்ப்பு அறிவிப்பில்) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 


மொத்த காலியிடங்கள்: 339


(i) டேராடூன் இந்திய ராணுவ கல்விக் கழகத்தில் 2022 ஜூலையில் தொடங்கவுள்ள 153-ஆவது பயிற்சி வகுப்பில்   - 100 பேர் 


(ii) கேரளாவின் எழிமலாவில் உள்ள இந்திய கப்பற்படை கல்விக்கழகத்தில் 2022 ஜூலையில்  தொடங்கவிருக்கும் பயிற்சி வகுப்பில் - 22 பேர் 


(iii) ஹைதராபாதில் உள்ள விமானப்படை கல்விக்கழகத்தில் 2022 ஜூலையில் தொடங்கவுள்ள (விமானம் ஓட்டுவதற்கு முந்தைய) பயிற்சி வகுப்பிலும் (212 எஃப் (பி))


(iv) சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தில் 2022 அக்டோபரில் தொடங்கவுள்ள 116-வது எஸ்எஸ்சி (என்டி) (ஆண்களுக்கான) பயிற்சி வகுப்பில் - 169 பேர் 


(v) சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தில் 2022 அக்டோபரில் தொடங்கவுள்ள 30-வது எஸ்எஸ்சி பெண்களுக்கான (தொழில்நுட்பமல்லாத) பயிற்சி வகுப்பில் -  16 பேர் 


என 339 பேருக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.    


 




இத் தேர்வுக்கான மின்னணு அனுமதிச் சீட்டினை, தேர்வு நடைபெறும் தேதிக்கு 3 வாரங்களுக்கு முன்பிருந்து, தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பற்றிய தகவல், விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்படும். 


ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதேனும் ஒரு அடையாள அத்தாட்சிகளை பதவிவேற்றம் செய்யவேண்டும்.  ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்


எழுத்துத் தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதார்கள், தேர்வு வாரியத்தால் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். அதில்,  தகுதி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் பயிற்சிகள் வழங்கப்படும். விண்ணப்பதாரர்களின் தேர்வு தற்காலிகமானதாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பதாரர்கள் தங்களது பிறந்தநாள் மற்றும் கல்வித் தகுதிகளின் அசல் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.


ஆட்சேர்ப்புப் பணி முழுவதும் இணையதளம் மூலம், நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. கடின உழைப்பு மற்றும் தகுதியின் மூலம் மட்டுமே ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.  கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதங்கள்,  பத்திரிகைகள், செல்பேசி, புளு டூத், ஹெட்போன், கால்குலேட்டர் போன்ற  மின்னணு சாதனங்கள் தேர்வுக் கூடத்திற்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது என ரயில்வே வாரியம் தெரிவித்தது.   


தேர்வு தொடர்பான தகவல்களை http://www.upsc.gov.in என்னும் இணைய தளத்தில் இருந்து விண்ணப்பதாரர்கள் பெறலாம்.


மேலும், வாசிக்க: 


SSC Tier-I Exam: தென் மண்டல எஸ்.எஸ்.சி தேர்வு டையர் 1-க்கான தேதிகள் அறிவிப்பு - விவரம் உள்ளே