தமிழ்நாட்டில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 22 தொடங்கி, செப். 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


பொறியியல் கலந்தாய்வு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்காக, மாணவர்கள் Choice Filling செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். இதற்குத் தயார் ஆவது எப்படி என்று பார்க்கலாம்.


இதுகுறித்து ஏபிபி நாடுவிடம் பிரபல கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறி உள்ளதாவது:


''Choice Filling செய்வது ஒரு கலை. முதலில் உங்கள் கட் –ஆஃப் மதிப்பெண்ணை எடுத்து, கொஞ்சம் கூடுதலாகவும் குறைவாகவும் கணக்கிட்டு கல்லூரிகளைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அதை ஒரு தாளில் குறித்துக் கொள்ளுங்கள்.


கல்லூரி பெயர், எண் (Code), அங்கு வழங்கப்படும் படிப்புகள், நீங்கள் விரும்பும் படிப்புகள் ஆகியவற்றை எழுதி வைக்க வேண்டும். குறைந்தபட்சம் 200 தேர்வுகள் முக்கியம் என்று நான் சொல்வேன்.


இதையும் வாசிக்கலாம்: Engineering Counselling 2024: அட்டவணையை குறிச்சி வச்சிக்கோங்க! ஜூலை 22 தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு! 


பிடித்திருக்கும் கல்லூரிகளுக்கு போன் செய்து அழைத்து, கலந்தாய்வு மூலமாக வந்தால் என்ன கட்டணம், தேர்வு, விடுதி, விளையாட்டுக் கட்டணங்கள், பிளேஸ்மெண்ட் கட்டணங்கள் ஆகியவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.


அதேபோல சாய்ஸ் ஃபில்லிங்கின்போது உடனடியாக சாய்ஸ் ஃபில் செய்து, லாக் செய்துவிடக் கூடாது. அவசரப்படாமல், தேர்வுகளை கவனமாகக் கண்டறிந்து முடிவு செய்யுங்கள்''.


பொறியியல் கலந்தாய்வுக்கான சாய்ஸ் ஃபில்லிங்கில், இன்னும் சில விஷயங்களும் முக்கியம். இதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைக் காணலாம்.


 



வேறு சந்தேகங்கள் இருந்தால் 6382219633 என்ற எண்ணை வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொள்ளலாம். அல்லது education.tamil@abpnetwork.com  என்ற இ-மெயில் முகவரிக்கும் சந்தேகங்களை அனுப்பலாம்.


இதையும் வாசிக்கலாம்: Engineering Cut Off 2024: நெருங்கும் பொறியியல் கலந்தாய்வு; கட்- ஆஃப் மதிப்பெண்கள் என்னவாகும்? துல்லிய அலசல்!