Theni, Dindigul pass Percentage, TN 12th Result 2023: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. குறிப்பாக மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு, ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.



TN 12th Result 2023 LIVE: தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி..! இந்தாண்டும் மாணவிகளே அதிகம்!




இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.  அதன்படி, தேனி மாவட்டத்தில் 93.17% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய   13,917 பேரில், 6,350 ஆண் மாணவர்களும், 6,616 பெண் மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.


TN 12th Result: 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு -”பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்” - அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை


மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் சதவீதமாக 90.11 சதவீதம் மாணவர்களும், 96.30 சதவீத மாணவிகளும் என மொத்தம் 93.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருட தேர்வு முடிவில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர்.


TN 12th Result: 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு -”பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்” - அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை




அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில்  மட்டும் 76 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற பனிரெண்டாம் வகுப்பு   மாணவர்கள் 9689 பேரும், 11113 மாணவிகளும் என மொத்தம் 20802 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் 8840 மாணவர்களும், 10665மாணவிகளும் என மொத்தம் 19505 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் சதவீதமாக 91.24 சதவீத மாணவர்களும், 95.97 சதவீத மாணவிகளும் என மொத்தம் 93.77 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் இந்த வருட தேர்வு முடிவில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண