TN 12th Result 2023 LIVE: 12ஆம் வகுப்பு மாணவர்களே.. மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
Tamil Nadu 12th Result 2023 LIVE Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய தலைவராக அமைச்சர் கயல்விழி செல்வராஜ்-ஐ நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் மக்களின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.288 கோடி நூதன முறையில் திருடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் தெரிவித்துள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் மே 13 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 600 மதிப்பெண் பெற்று நந்தினி மாணவி சாதனை அனைத்து பாடங்களிலும் 100 க்கு 100மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 94.31 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி.
4768 மாணவர்களும், 5436 மாணவிகள் என மொத்தம் 10,204 பேர் தேர்வு எழுதினர். இதில் 4385 மாணவர்கள், 5238 மாணவிகள் என மொத்தம் 9623 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.97 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.36 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 19 ம் தேதி துணை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்கள் 27865, மாணவர்கள் 13536, மாணவிகள் 14329, மொத்த தேர்ச்சி 25022, மாணவர்கள் 11554, மாணவிகள் 13468 (மொத்த தேர்ச்சி விகிதம் 89.60)
சேலம்
சேலம் மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 17,733 மாணவர்கள், 19,528 மாணவிகள் என 37,261 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதிய நிலையில், 16,300 மாணவர்கள், 18,809 மாணவிகள் என மொத்தம் 35,109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.92 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.32 ஆகும்.
சேலம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 94.22% ஆகும்.
அரசு பள்ளிகளை பொறுத்தவரை 19,190 மாணவர்கள் தேர்வு எழுதி நிலையில், 17,572 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 91.57 ஆக உள்ளது..
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் +2 தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை - 30910 பேர்கள்.
ஆண்கள் - 14,390
பெண்கள் - 16520
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை - 29,679 பேர்கள்
ஆண்கள் - 13,520
பெண்கள் - 16,159
தேர்ச்சி - ஆண்கள் - 93.95 சதவீதம்
தேர்ச்சி - பெண்கள் - 97.81
மொத்தம் தேர்ச்சி சதவீதம் - 96.02
+ 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள். - 1,231
விழுப்புரம்:
தேர்வு எழுதிய மாணவ மற்றும் மாணவிகளின் எண்ணிக்கை 21566, இதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 19552 . தேர்ச்சி சதவீதம் 90.66
தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை, 10762 தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 9366 . மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.03
தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை 10804, தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 10186 . தேர்ச்சி விகிதம் 94.28
விழுப்புரம் மாவட்டத்தின் அரசு பள்ளி தேர்ச்சி விகிதம்
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 114 பள்ளியை சேர்ந்த 14680 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்ச்சி பெற்றவர்கள் 12939. தேர்ச்சி விகிதம் 88.14
மயிலாடுதுறை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.15 சதவீதம் பேர் தேர்ச்சி.
மாணவர்கள் :4594 பேர்
மாணவிகள் : 5743 பேர் என 10,337 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில்
3977 மாணவர்களும், 5342 மாணவிகளும் என 9319 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்கள் - 86.57 சதவீதம், பெண்கள் - 93.02 சதவீதம் என வழக்கம்போல் பெண் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை: 90
தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை: 79 (87.78%)
தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை : 4398
தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை: 3923 (89.20%)
தமிழ்நாட்டில் மாணவர்கள் 3,49,697 (91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மாணவியர்கள் 4,05,753 (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மே 2022 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 22,957
இந்தாண்டு மார்ச்/ஏப்ரல் 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 32,501
காஞ்சிபுரத்தில் தேர்வு எழுதிய மாணவ மற்றும் மாணவிகளின் எண்ணிக்கை 13141, இதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 11935 . (தேர்ச்சி சதவீதம் 90.82)
தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை: 6429
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 5561 . (மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.50)
தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை: 6712
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 6374 . (தேர்ச்சி விகிதம் 94.96)
காஞ்சிபுரம் மாவட்டத்தின் அரசு பள்ளி தேர்ச்சி விகிதம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 48 பள்ளியை சேர்ந்த 6847 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்ச்சி சதவீதம் 5920. (தேர்ச்சி விகிதம் 86.46)
தேர்வெழுதிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை : 8,03,385
தேர்ச்சி பெற்றவர்கள் : 7,55,451
பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் 4.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரியில் 92.67 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி பேட்டியளித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அண்ணா நூலகத்திற்கு வருகை தந்தார்.
புதுச்சேரியிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிடுகிறார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சரியாக காலை 9. 30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், 9.40 மணியாகியும் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நெருக்கடி கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டுமென பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எதிர்பார்த்தது கிடைத்தால் வெற்றி.. கிடைக்காவிட்டால் முயற்சி என்பதற்கு ஏற்ப அறிவுரை வழங்கி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்துங்கள்
இன்னும் சற்று நேரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருக்கிறது.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்களின் மொபைல் எண்ணிற்கே அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளால் அச்ச உணர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை மாணவ, மாணவிகள் சந்திக்க நேர்ந்தால், உடனடியாக 104, 044 -24640050 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து ஆலோசனை பெறலாம்
மாணவர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.. பெற்றோரின் துணையே மாணவர்களின் தேவை
மாணவர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.. பெற்றோரின் துணையே மாணவர்களின் தேவை
TN 12th Result 2023 LIVE: இன்னும் சற்றுநேரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்வியில் சேருவது குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள 14417 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடுகிறார்.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
Background
Tamil Nadu 12th Result 2023 LIVE
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுதினர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு விடைத்தாள்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
மாற்றப்பட்ட ரிசல்ட் தேதி
விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டு முதலில் மே 5ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாவதாக இருந்தது. ஆனால் நேற்று ( மே 7) இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இதனால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. மாணவர்களும் பெற்றோர்களும், ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்தது.
வெளியான தேர்வு முடிவுகள்
அதன்படி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -