Theni, Dindigul pass Percentage, TN 12th Result 2023: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. குறிப்பாக மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு, ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் 96.61% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 19722 பேரில், 8576 ஆண் மாணவர்களும், 10477பெண் மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் சதவீதமாக 95.11 சதவீதம் மாணவர்களும், 97.87சதவீத மாணவிகளும் என மொத்தம்96.61 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல தென்காசி மாவட்டத்தில் 95.96% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 16746 பேரில், 7194 ஆண் மாணவர்களும், 8875 மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் சதவீதமாக94.13 சதவீதம் மாணவர்களும், 97.50சதவீத மாணவிகளும் என மொத்தம் 95.96 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல கண்ணியாகுமரி மாவட்டத்தில் 97.05% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 22389 பேரில், 10269 மாணவர்களும், 11456 மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் சதவீதமாக 95.01சதவீதம் மாணவர்களும், 98.95சதவீத மாணவிகளும் என மொத்தம் 97.05 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்