9,14,320 மாணவ, மாணவியர்கள் எழுதிய 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று வெளியானது. 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.




முதலில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான அன்று, இந்த தேர்வு முடிவுகள் தேதி 19 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. சுமார்  9,14, 320 மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வில்  8,35, 614 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். சுமார் 78,706 பேர் தோல்வியடைந்துள்ளனர். 


TN 10th Supplementary Exam: 10 ஆம் வகுப்பு தேர்வில் 78,706 பேர் தோல்வி.. வெளியானது துணைத்தேர்வுக்கான அறிவிப்பு..!


இதனைத் தொடந்து தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 23 முதல் 27 ஆம் தேதி வரை துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இதுகுறித்த விரிவான விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 




தேனி மாவட்டத்தில் 90.26% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 14647 பேரில், 6,384 ஆண் மாணவர்களும், 6,836 பெண் மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் சதவீதமாக 86.63 சதவீதம் மாணவர்களும், 93.930 சதவீத மாணவிகளும் என மொத்தம் 90.26 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருட தேர்வு முடிவில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவில் பத்தாம்  வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர்.


10th Result District Wise: ’படிப்பே எங்கள் மூச்சு’ .. 10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த பெரம்பலூர்.. கடைசி இடம் இந்த மாவட்டமா?


அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் தேர்வு எழுதிய 24286 பேரில், 10680 ஆண் மாணவர்களும், 11607பெண் மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் சதவீதமாக 89.02 சதவீதம் மாணவர்களும், 94.45 சதவீத மாணவிகளும் என மொத்தம் 91.77 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருட தேர்வு முடிவில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவில் பத்தாம்  வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர்.




Rajinikanth 171: ரஜினியின் கடைசி படத்தை இயக்குகிறாரா லோகேஷ்...! மிஸ்கின் சொன்ன அதிர்ச்சி தகவல்!


அதேபோல நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரையில் தேர்வு எழுதிய 22400 பேரில், 10156 ஆண் மாணவர்களும்,10942 பெண் மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் சதவீதமாக 91.28 சதவீதம் மாணவர்களும், 97.06 சதவீத மாணவிகளும் என மொத்தம் 94.19 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண