Education Loan: கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம் - இதெல்லாம் மறக்காதீங்க

தேனி மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம் 30.08.2024 அன்று நடைபெற உள்ளது.

Continues below advertisement

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவ,மாணவியர்களுக்கும் கல்விக்கடன் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்புகல்விக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டிபட்டி வட்டம் திம்மரசநாயக்கனூரில் உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 30.08.2024 அன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கல்விக்கடன் வழங்கும் முகாம் (Education Loan Mela / Camp) நடைபெற உள்ளது.

Continues below advertisement

Jagathrakshakan MP : "திமுகவை குறி வைத்த அமலாக்கத்துறை” எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு 908 கோடி ரூபாய் அபராதம்..!

இந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில் பொறியியல் கல்லூரி, மருத்துவகல்லூரி, வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி,தொழிற்பயிற்சி கல்லூரி, சட்டக் கல்லூரி போன்ற அனைத்து வகையானகல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

Vijay: ஸ்டண்ட் காட்சிகள் மிஷன் இம்பாசிபள் படம் மாதிரி இருக்கும்.. தி கோட் படம் குறித்து திலிப் சுப்பராயன்


மேலும் இம்முகாமில் கலந்து கொள்ளும் மாணவ / மாணவியர்கள் தங்களின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், முகவரிக்கான சான்று, ஆதார் கார்டு, பெற்றோரின் பான்கார்டு. வங்கிக்கணக்கு எண், Bonafide certificate உள்ளிட்ட தேவையானஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் இம்முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள். மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் கல்விக்கடன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கும், ஏற்கனவே vidyalakshmi இணையதளத்தில் கல்விக்கடன் கோரி விண்ணப்பித்த மாணவ மாணவிகளின் மனுக்களை பரிசீலனை செய்து கடன் வழங்க நடவடிக்கை எடுப்பார்கள்.

Breaking News LIVE: திருமண நாளை முன்னிட்டு திருப்பதியில் அன்புமணி ராமதாஸ் குடும்பத்துடன் தரிசனம்

இம்முகாம் குறித்த விபரங்கள் அறிய தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி),மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், தேனி (அறை எண்: 11)  அணுகவும்.  மாணவர்கள் அனைவரும் தவறாமல் இந்த கல்விக்கடன் முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்  ஷஜிவனா, தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola