Breaking News LIVE: திருமண நாளை முன்னிட்டு திருப்பதியில் அன்புமணி ராமதாஸ் குடும்பத்துடன் தரிசனம்
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்

Background
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்கா சென்றார்
தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியர் கோபிநாத் மற்றும் முரளிதரனுக்கு தேசிய விருது -செப்டம்பர் 5ம் தேதி விருதுகளை வழங்குகிறார் குடியரசு தலைவர்
20230ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றக்கூடிய இலக்கை அடைவோம் - அமெரிக்கா புறப்படும் முன் முதலமைச்சர்பேட்டி
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? முதலமைச்சர் பதில்
எடப்பாடி பழனிச்சாமி மீதான விமரிசனம் 100 சதவீதம் சரி - அண்ணாமலை திட்டவட்டம்
அண்ணாமலைக்கு அரசியல் நாகரீகம் இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
புதுக்கோட்டை சப் வந்திதா பாண்டேவிற்கு கனிமொழி ஆதரவு
நீலகிரியில் கனமழை பொதுமக்கள் அவதி - ஆறுகளில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்
கொல்கத்தாவில் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் கலவரம் - போலீஸ் தடியடி
மம்தா பானர்ஜி சர்வாதிகாரி போல ஆட்சி செய்கிறார் - ஜேபி நட்டா குற்றச்சாட்டு
2024 பாராலிம்பிக் தொடர் இன்று பாரிசில் தொடக்கம் - வீரர்கள் ஆர்வம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்புமணி ராமதாஸ் குடும்பத்துடன் தரிசனம்
தன்னுடைய திருமண நாளை ஒட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் குடும்பத்தோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார்
Breaking News LIVE: நாட்றம்பள்ளி: கல்குவாரி அமைக்க எதிர்ப்பு - பொதுமக்கள் சுமார் 2மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி கல்லூர் பகுதியில் கல்குவாரி அமைக்கப்படுவதாக தெரிகிறது.
அதன் காரணமாக அப்பகுதியில் கல்குவாரி அமைக்கப்பட்டால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் மற்றும் பெரியார் முதல் சிறியவர்கள் வரை பல்வேறு நோய் தொற்று ஏற்படும் எனவே அப்பகுதி கல்குவாரி அமைக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அளித்துள்ளனர்.
ஆனால் கல்லியூர் பகுதியில் மீண்டும் கல்வாரி அமைக்கப் பணிகள் நடைபெற்றதால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் திடீரென பச்சூர் வழியாக குப்பம் செல்லும் சாலையில் சென்றாய சுவாமி கோவில் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Breaking News LIVE: திரைத்துறையில் பாலியல் சுரண்டல்கள் முடிவுக்கு வர வேண்டும் - குஷ்பு
மலையாள திரையுலகில் எழுந்துள்ள பாலியல் புகார்கள் மனதை உலுக்குகிறது. பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளை முறியடிக்க ஹேமா கமிட்டி அறிக்கை அவசியமானதாக அமைகிறது. பாலியல் வன்கொடுமைகளை யாரும் மறைக்க வேண்டியதில்லை. உங்கள் கண்ணியம், மரியாதையை ஒருபோதும் சமரசம் செய்ய தேவையில்லை. திரைப்படத்துறையில் பாலியல் சீண்டல்கள் முடிவுக்கு வர வேண்டும்
Breaking News LIVE: நீலகிரி: மான் இறைச்சி பறிமுதல் - 15 பேர் கைது
நீலகிரி கோத்தகிரி அருகே மான் இறைச்சியை பறிமுதல் செய்து 15 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் இருச்சக்கர வாகனத்தில் மான் இறைச்சி கொண்டு சென்ற பொம்மன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரனையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோத்தகிரி அருகே இறைச்சிக்காக மான் வேட்டையாடி சமைத்து சாப்பிடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Breaking News LIVE: தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,715க்கும் சவரன் ரூ.53,720க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ. 93.50க்கு விற்பனை ஆகிறது.
Breaking News LIVE: தமிழகத்தில் 2 வந்தே பாரத் ரயில் - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் 2 வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
நாகர்கோவில் - சென்னை எழும்பூர், மதுரை - பெங்களூர் கண்டோன்மெண்ட் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மொடி 31ஆம் தேதி காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்திற்கு இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் இன்று பாராலிம்பிக் தொடங்குகிறது
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் இன்று பாராலிம்பிக் தொடங்குகிறது.