குரூப் 2, 2ஏ தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


2022ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94,878 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 84.44% பேர் தேர்வு எழுதவில்லை. 


நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.முதன்மைத் தேர்வுகள் தமிழ்நாட்டில் 32 மையங்களில், காலை 9 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளன. மாநிலம் முழுவதும் 32 நகரங்களில் 117 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும். மாலையில் நடைபெறும் தேர்வில் எந்த நேர மாற்றமும் இல்லை. தேர்வில் ஜெல் பேனா, பால் பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்தலாம்.


இந்நிலையில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த விடைக் குறிப்பில் மாற்று கருத்துகள் இருப்பின், ஒருவார காலத்துக்குள் பதிவு செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


பொதுத்தமிழ் விடைக் குறிப்புகள்:



பொது ஆங்கிலத்துக்கான விடைக்குறிப்புகள்



முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


முன்னதாக குரூப் 2, 2ஏ தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. 4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன. இவ்வாறு 993 குழுக்கள் செயல்பட்டன. 6,400 ஆய்வுக் குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


லைஃப்ஸ்டைல் செய்திகளை இங்கு படிக்கவும்..


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய கல்வி செய்திகளைஅறிய Abpnadu-இல் கல்வி செய்திகள் (Education news) என்ற பக்கத்தில் தொடரவும்.